இரவு உணவைத் தவிர்ப்பதன் தீமைகள்: இன்று பலர் எடை அதிகரிப்பு பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, மக்கள் புதிய முறைகளை கையாள்கிறார்கள். சிலர் ஜிம் சென்று பல வித உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சிலர் உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்கிறார்கள். சிலரோ உணவை முழுவதுமாக விட்டுவிடுகிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று பலர் நினைக்கிறார்கள். இந்தத் தவறான எண்ணத்தால் இரவு உணவைத் தவிர்த்து விடுகிறார்கள். ஆனால், இது சரியா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறைவான உணவை உட்கொள்வதால் உடல் எடை குறையும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. ஆனால் இந்த எண்ணம் முற்றிலும் தவறானது என்பது குறிப்பிடத்தக்கது. உணவைத் தவிர்ப்பது எடையைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரிக்கும். இரவு உணவு உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானது. இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. எனினும், இரவு உணவின் அளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதும் உண்மை. இரவு உணவு குறித்த சில முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் காணலாம். 
 
இரவு உணவைத் தவிர்ப்பதால் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்
 
1. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு பிரச்சனை


இரவு உணவைத் தவிர்ப்பதால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும். இரவு உணவைத் தவிர்ப்பது உங்கள் உணவு வழக்கத்தை கெடுத்துவிடும், இது உங்கள் செரிமான அமைப்பையும் பாதிக்கிறது.
 
2. பலவீனம் தொடங்குகிறது


நீங்கள் இரவு உணவை உட்கொள்ளாமல் இருந்தால், ​​அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலை சென்றடையாது. இதனால் உங்கள் உடல் பலவீனமடைகிறது. பலவீனத்தால் எளிதில் சோர்வடைகிறீர்கள்


மேலும் படிக்க | உடல் எடை குறைய அரிசி உணவை தவிர்க்க வேண்டுமா... நிபுணர்கள் கூறுவது என்ன!
 
3. தூக்க சுழற்சி பாதிக்கப்படுகிறது


இரவு நேரத்தில் வெறும் வயிற்றில் தூங்குவதால், உங்கள் தூக்கச் சுழற்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் இரவில் தூக்கம் வராமல், அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கிறது. இதனால், எப்போதும் எரிச்சலான மனநிலை இருக்கும். 
 
4. உடலின் இரத்த சர்க்கரை அளவு மீது தாக்கம் ஏற்படும் 


நேரத்துக்குச் சாப்பிடாமலோ, இரவில் சாப்பிடாமலோ இருந்தால், அதன் விளைவு உடலின் ரத்தச் சர்க்கரையின் அளவைப் பாதிக்கிறது. சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்ப்படுபவர்கள் இரவு உணவை கண்டிப்பாக தவிர்க்கக்கூடாது. 
 
5. எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கலாம்


ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் உணவும் அதை உட்கொள்ளும் நேரமும் மிகவும் முக்கியமானது. காலை உணவு கனமாகவும், மதிய உணவு சிறிது இலகுவாகவும், இரவு உணவு மிகவும் இலகுவாகவும் இருக்க வேண்டும். ஆனால் இரவு உணவைத் தவிர்க்க வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. நீங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருந்து இரவு உணவைத் தவிர்த்தால், அதுவும் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையால் தொல்லையா? பிஸ்தா சாப்பிடுங்க, உடனே பலன் தெரியும்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ