Weight Loss Tips: இவற்றை இரவு உணவில் உட்கொண்டால் ஒரே வாரத்தில் கொழுப்பை குறைக்கலாம்

Dinner Tips for Weight Loss: இரவு உணவை, நாம் உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உட்கொள்ள வேண்டும். அப்படி செய்வதால் நாம் முழுமையான தூக்கத்தை பெற முடியும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 20, 2022, 07:18 PM IST
  • நல்ல உணவுமுறை உடல் எடையைக் குறைக்க உதவும்.
  • எந்த வேளையில் எப்படிப்பட்ட உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
  • இரவு உணவு எப்போதும் இலகுவாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும்.
Weight Loss Tips: இவற்றை இரவு உணவில் உட்கொண்டால் ஒரே வாரத்தில் கொழுப்பை குறைக்கலாம்  title=

உடல் எடையை குறைக்க இரவு உணவில் சாப்பிட வேண்டிய உணவுகள்: உடல் எடை அதிகரிப்பது இன்றைய நாட்களில் அனைவருக்கும் உள்ள பிரச்சனையாக உள்ளது. உடல் எடையை குறைக்க அனைவரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். உடல் எடை அதிகரிப்பதால் பல நோய்களை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. நாம் நமது உடலை ஃபிட்டாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்? உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில், ​​உடற்பயிற்சியுடன் உணவுக் கட்டுப்பாட்டிலும் தனி கவனம் செலுத்த வேண்டும். 

நல்ல உணவுமுறை உடல் எடையைக் குறைக்க உதவும். எந்த வேளையில் எப்படிப்பட்ட உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இரவு உணவு எப்போதும் இலகுவாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். இதன் மூலம் நாம் போதுமான தூக்கத்தைப் பெறுவதோடு நமது எடையையும் நாம் கட்டுக்குள் கொண்டு வர முடியும். 

இரவு உணவை, நாம் உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உட்கொள்ள வேண்டும். அப்படி செய்வதால் நாம் முழுமையான தூக்கத்தை பெற முடியும். மறுபுறம், நாம் இரவு உணவை இலகுவாக உட்கொண்டால், அது எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இரவு உணவில் நாம் எந்தெந்த உணவை உட்கொண்டால், அது நம் உடல் நலனுக்கு நல்லது என்பதை நாம் தெரிந்துகொள்வது மிக அவசியமாகும். அதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | Oats For Weight Loss: உடல் எடையை குறைக்க ஓட்ஸை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? 

உடல் எடையை குறைக்க, இரவு உணவில் இதை சாப்பிடுங்கள்:

பச்சைப்பயறு:

பயத்தம்பருப்பில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விருப்பம் கொண்டவர்கள், இரவு உணவில் இந்த பருப்பை உட்கொள்ளலாம். பயத்தம்பருப்பை வேக வைத்து தாளித்து ‘தால்’ செய்து சாப்பிடலாம். 

ஜவ்வரிசி கிச்சடி:

ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இதன் காரணமாக அதை சாப்பிடுவது இலகுவாக இருக்கும். எனவே, தினமும் இரவு உணவில் ஜவ்வரிசி கிச்சடியை உட்கொள்ளலாம். இதை செய்ய, ஒரு கப் ஜவ்வரிசியை கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பிறகு கடாயில் நெய்யை சூடாக்கி சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து, பின் உருளைக்கிழங்கு, ஜவ்வரிசி, வேர்கடலை, சேர்த்து, பிறகு உப்பும் கொத்தமல்லியும் சேர்த்து வதக்கவும். விருப்பப்பட்டால், இதில் எலுமிச்சைப் பழ சாற்றையும் சேர்க்கலாம். 

பப்பாளி சாலட்:

பப்பாளி மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தருகிறது. மேலும் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் இரவு உணவில் இதை உட்கொள்ளலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா... உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ‘முக்கிய’ உணவுகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News