புதுடெல்லி:  எடை இழப்பு, நல்ல தூக்கம்  ஆகியவை கிடைக்க பலர் அடிக்கடி தங்கள் உணவை மாற்றுகிறார்கள். ஆனால் சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது பல உடல் நலப் பிரச்சினைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும் என்பது உங்களுக்குத் தெரியுமா?  அதுவும் எடைய இழப்பிற்கான இந்த சிறந்த டயட் பிளான் மூலம், ஒரு வாரம் முழுவதும் 1000 கலோரிகள் மட்டுமே  எடுத்துக் கொள்வீர்கள். ஒரு வாரம் முழுவதும் உணவில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால், உடல் எடை குறையும் (Weight Loss) என்பது உறுதி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலையில்  சாப்பிட வேண்டியவை


1 வால்நட், 4 பாதாம், 1 அத்திப்பழத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். இவை அனைத்தையும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீர், பெருஞ்சீரகம் தண்ணீர் அல்லது எலுமிச்சை தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர, எந்த இரண்டு பருவகால பழங்களையும் நாள் முழுவதும் சாப்பிடுங்கள். 


ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!


ஒரு வார காலத்திற்கான டயட் பிளான்


முதல் நாள்


காலை உணவில், காய்கறிகள் நிறைந்த அவல் உப்புமா ஒரு கப் சாப்பிடுங்கள். மதிய உணவில், ஒரு சப்பாத்தி, 1 கப் பருப்பு, 1 கப் காய்கறிகள் மற்றும் சாலட் சாப்பிடுங்கள்.
இரவு உணவில் வேக வைத்த உணவை அளவாக  சாப்பிடுங்கள்.


இரண்டாம் நாள்


காலை உணவில், 1 வெந்தய கீரை சேர்த்து செய்யப்பட்ட சப்பாத்தியை அரை கப் தயிருடன் சாப்பிடுங்கள். மதிய உணவில், ஒரு சப்பாத்தி, 1 கப் பனீர், அரை கப் பருப்பு மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில், வெஜிடபிள் கட்லெட் சாப்பிடுங்கள். இது பொரித்ததாக இல்லாமல், தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வேக வைத்ததாக இருந்தால் மிகவும் நல்லது.


ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!


மூன்றாவது நாள்


காலை உணவில் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிடுங்கள். மதிய உணவில், 2 ஊத்தாப்பம், 1 கப் சாம்பார், 2 டீஸ்பூன் தேங்காய் சட்னி சாப்பிடுங்கள். இரவு உணவில், புதினா சட்னியுடன் 1 பொங்கல் அல்லது கிச்சடியை சாப்பிடவும்.


நான்காவது நாள்


காலை உணவில், ரொட்டியுடன் 2 வேகவைத்த முட்டை (Egg) அல்லது 1 முட்டை ஆம்லெட் சாப்பிடுங்கள்.
மதிய உணவில், 1 கப் ராஜ்மா, 1 கப் சாதம் மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில், 1 கப் காய்கறிகள் மற்றும் சாலட், முளை கட்டிய தானியங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்


ஐந்தாம் நாள்


காலை உணவில், காய்கறிகள் நிறைந்த 1 கப் உப்புமா சாப்பிடுங்கள். மதிய உணவில், 1 கப் தயிர், 1 கப்  காய்கறி, 1 ரொட்டி மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில், கேப்பை தோசை சட்னியுடன் எடுத்துக் கொள்ளுங்கள்


ஆறாம் நாள்


காலை உணவில் புதினா சட்னியுடன் வெஜிடபிள் ஊத்தப்பம். மதிய உணவில், 3 இட்லிகள் மற்றும் 1 கப் சாம்பார் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் சட்னி சாப்பிடுங்கள். இரவு உணவில், 1 கப் காய்கறிகள் நிறைந்த உப்புமா
 
ஏழாவது நாள்


காலை உணவில், காய்கறிகளால் செய்யப்பட்ட சேமியா உப்புமா (Upma) ஒரு கப் சாப்பிடுங்கள். மதிய உணவில், 1 கப் பருப்பு, 1 கப் காய்கறிகள், 1 ரொட்டி மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில், காய்கறிகளுடன் 200 கிராம் பன்னீர் 


இரவு உணவுக்குப் பிறகு க்ரீன் டீ அருந்தவும்


தினமும் இரவு உணவுக்கு 30 முதல் 40 நிமிடங்களுக்குப் பிறகு க்ரீன் டீ, லெமன்கிராஸ் டீ, சீரக டீ, அல்லது பெருஞ்சீரகம் டீ குடிக்கவும். இது உணவை ஜீரணிக்க உதவுவது மட்டுமல்லாமல், சிறந்த தூக்கத்திற்கும் நன்மை பயக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை கடைபிடிக்கும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR