Cardamom Benefits For Weight Loss: அதிகரித்து வரும் எடையை எப்படி குறைப்பது என்ற சவாலை சமாளிக்க மக்கள் போராடி வருகின்றனர். சமையலறையில் உள்ள பொருட்களே, நமக்கு ஆரோக்கியத்திற்குக் அடிப்படையாக உள்ளது. இருந்தாலும், உணவில் நறுமணத்தைக் கூட்ட உதவும், ஏலக்காயால் தொப்பையை குறைக்க முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் ஏலக்காய்


நறுமணத்தை மட்டுமல்ல, தொப்பையையும் குறைக்கும் பொருள் ஏலக்காய் என்பது பலருக்குத் தெரியாது. மணத்திற்கு மட்டுமல்ல உடல் எடை குறைப்புக்கும் ஏலக்காய் என்பது பாரம்பரியமான ஒன்று. உடல் பருமன் என்பது தனிப்பட்ட முறையில் நோய் என்று சொல்லாவிட்டால், பல நோய்கள் ஏற்பட அடிப்படையான விஷயமாக இருக்கிறது.


மாறிப் போன வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் என உடல் எடை அதிகரிக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஏலக்காயை பயன்படுத்தி, விரைவில் எடையை குறைக்கலாம்.


மேலும் படிக்க | வசீகரிக்கும் உதடுகளை கொடுக்கும் ஏலக்காய்! அற்புதமான மருத்துவ பலன்கள்


ஏலக்காயின் பயன்கள்
உடலில் படியும் கொழுப்பை குறைக்கும் குணம் கொண்ட ஏலக்காயை தினசரி உணவில் சேர்த்து வந்தால், வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை இயற்கையாகவே கரைக்கலாம். பொதுவாக உணவிலும், இனிப்புப் பதார்த்தங்களிலும் சேர்க்கப்படும் ஏலக்காய், தேநீரிலும் பயன்படுத்தப்படும்.  


உடல் எடை குறைக்க உதவும்
ஏலக்காயில் கொழுப்பை எரிக்கும் குணம் உள்ளது, இதனை தினசரி உணவில் சேர்த்து வந்தால், வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை இயற்கையாகவே கரைக்கலாம்.  


கொலஸ்ட்ரால் குறையும்
ஏலக்காய் சாப்பிடுவது செரிமான சக்தியை அதிகரிக்கிறது. அதனால், வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை, மலச்சிக்கல், வயிற்றில் எரியும் வாயு மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளும் நீங்கும். செரிமான சக்தி அதிகரிப்பதால், படிப்படியாக எடை குறையயும். தினமும் ஒன்று அல்லது இரண்டு சிறிய ஏலக்காயை சமைக்காமல் அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ராலை சட்டென்று குறைந்துவிடும்


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) 


மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு! நீரிழிவு மேலாண்மைக்கு உகந்த பழங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ