குண்டு குண்டா இருக்கீங்களா? அப்போ இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க
Ginger For Weight Loss: உடல் எடையை சீராக பராமரிப்பது என்பது பொதுவாக எல்லோருடைய கனவு. உடல் எடையை பராமரிப்பது அழகுக்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திலும் முக்கியத்துவம் வகிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், எடையைக் குறைப்பதில் இந்த பொருள் பயனுள்ளதாக இருக்கும்.
உடல் எடை குறைக்க இஞ்சி எப்படி உதவும்: இஞ்சி உணவின் சுவையை மேம்படுத்தவும், மருத்துவம் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகளவு காணப்படுகின்றன, மேலும் இதில் ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் எனப்படும் கூறுகள் உள்ளன, இது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். மறுபுறம், எடை இழப்பு பற்றி பேசுகையில், இஞ்சி (Ginger) எடை இழப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதேபோல் இது எடை மேலாண்மை மற்றும் வளர்சிதை மாற்றத்திலும் விளைவைக் காட்டுகிறது. இத்தகைய அற்புதங்கள் நிறைந்த இஞ்சியை நாம் பச்சையாக சாப்பிடலாம் ஆனால் எடை குறைப்பதில் அதன் சிறந்த விளைவு தேநீர் வடிவில் மட்டுமே காணப்படுகிறது. அதுவும் பால் இல்லாத இஞ்சி டீ குடித்தால் உடல் எடையை வெகுவாக குறையும். எனவே இஞ்சி டீ (Ginger Tea) தயாரிப்பது எப்படி மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளுங்கள்.
உடல் எடை குறைக்க இஞ்சி டீ | Ginger Tea For Weight Loss
முதலில் இஞ்சி தேநீர் தயார் செய்ய, ஒன்று முதல் ஒன்றரை கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தை கொதிக்க விடவும். பிறகு இஞ்சியைத் துண்டுத் துண்டாக நறுக்கி இந்தத் தண்ணீரில் போடவும். இஞ்சி நன்கு கொதித்ததும் இந்த டீயை ஒரு கப்பில் வடிகட்டி எடுத்து வைக்கவும். இறுதியாக இந்த டீயில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் அரை டீஸ்பூன் தேன் கலந்து அருந்தலாம். இதை நீங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும் மற்றும் தொப்பை கொழுப்பும் (Belly Fat) குறையத் தொடங்கும். இஞ்சியை டீ செய்து குடிப்பதைத் தவிர, காய்கறி அல்லது உப்புமா போன்ற உணவுப் பொருட்களில் சேர்த்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க | முடி அதிகம் உதிர்கிறதா? வீட்டில் செய்யக்கூடிய இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுங்கள்!
இஞ்சியின் மற்ற நன்மைகள்
* இஞ்சி டீ உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமின்றி, இந்த தேநீரில் இருந்து பல நன்மைகளை நாம் பெறலாம். அதன்படி இஞ்சி டீ குடித்து வந்தால் உடலுக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி இஞ்சி டீ குடிப்பதன் மூலம் காலையில் ஏற்படும் மார்னிங் சிக்னஸையும் நாம் போக்கலாம்.
* வாந்தி (Vomiting) வரும் போல் நீங்கள் உணர்ந்தால், இஞ்சி டீ குடிக்கலாம், இது உடனடி நிவாரணம் தரும். இது குமட்டலை நீக்குகிறது மற்றும் வாந்தி வருவதை தடுக்க உதவும்.
* இஞ்சியின் நுகர்வு இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதிலும் பலன் தரும். எனவே தான் நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் இஞ்சி டீ குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* மாதவிடாய் காலங்களில் இடுப்பில் வழி, வற்றில் வழி போன்றவை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், மாதவிடாய் காலங்களில் இஞ்சி தேநீர் குடித்து வந்தால் வயிற்று வலியிலிருந்து நீங்கள் நிவாரணம் பெறலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்கலிய உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினமும் 30 நிமிடங்கள் போதும்... உடல் கொழுப்பை எரிக்கும் சில எளிய பயிற்சிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ