Benefits of Pomegranate: பழங்கள் நம் உடல் ஆரொக்கியத்திற்கு பல வித நன்மைகளை அளிக்கின்றன. ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உள்ளது. பல வித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் மாதுளையும் ஒன்று. மாதுளை ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படுகிறது. தினமும் மாதுளை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. மாதுளையில் பல வித ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் சி, கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவை அதிக அளவில் உள்ளன. மாதுளையில் புனிகலஜின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் எனப்படும் இரண்டு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளன. தினமும் வெறும் வயிற்றில் ஒரு மாதுளை சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் தனித்துவமான பலன்கள்


ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது


தினமும் வெறும் வயிற்றில் 1 மாதுளையை சாப்பிட்டு வந்தால் உடலில் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் குறைகிறது. மாதுளையை தொடர்ந்து சாப்பிடுவதால் மன அழுத்தம் மற்றும் உடலில் உள்ள வீக்கம் குறைவதாக சுகாதார நிபுணர்களின் கூறுகிறார்கள். மாதுளை இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.


இதய ஆரோக்கியம்


மாதுளையில் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. மாதுளை இதய நோய்களுக்கு நிவாரணம் அளிக்கின்றது. மாதுளை சாப்பிடுவது உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வருகிறது. இது தவிர மாதுளை இரத்த அழுத்த பிரச்சனையையும் கட்டுப்படுத்துகிறது. தினமும் வெறும் வயிற்றில் மாதுளை சாறு குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். மாதுளை மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது.


ஜீரண சக்தியை அதிகரிக்கும்


மாதுளையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. மாதுளை சாப்பிடுவதால் குடல்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. மாதுளையில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் செரிமான அமைப்பில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கின்றன. மாதுளை சாப்பிடுவதால் வயிற்றுப்புண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். தினமும் மாதுளை சாப்பிடுவது அனைத்து வயிற்று பிரச்சனைகளையும் தவிர்க்க உதவும். 


அழற்சி எதிர்ப்பு பண்புகள்


மாதுளையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் அழற்சி பிரச்சனைகளை குறைக்கிறது. பல வித ஆரோக்கிய நமைகள் அடங்கிய மாதுளை சாப்பிடுவது நாள்பட்ட வீக்க பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. மூட்டு வலி மற்றும் வீக்கம் உள்ளவர்கள் தினமும் மாதுளை சாப்பிடலாம். மாதுளையில் உள்ள சில கூறுகள் பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்க உதவுவதாக ஒரு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பீதியை கிளப்பும் நிபா வைரஸ்... 14 வயது சிறூவன் பலி... ஹை அலர்டில் அதிகாரிகள்


நோய் எதிர்ப்பு சக்தி


மாதுளையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. ஆகையால், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த மாதுளை உட்கொள்ளலாம். மாதுளையில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்திக்கு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.


சரும ஆரோக்கியம் 


மாதுளையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரிய பங்கு வகிக்கின்றன. மாதுளம்பழத்தில் உள்ள கலவைகள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும், வயதாகும் போது ஏற்படும் சரும பாதிப்புகளை தடுக்கவும் உதவுகின்றன. மாதுளை சருமத்தில் கொலாஜனை அதிகரிக்க உதவுகிறது. மாதுளையில் இயற்கையான ஈரப்பதமூட்டும் தன்மையும் உள்ளதால், இதை உட்கொள்வதால் சருமம் நீரேற்றதுடன் இருக்கின்றது. 


மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்


மாதுளை சாப்பிடுவதால் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இது மூளை வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும். மாதுளம்பழத்தில் உள்ள எலாகிடானின் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மூலம் நரம்பியல் நோயின் அபாயங்கள் தவிர்க்கப்படுகின்றன. 


மாதுளையை எப்படி சாப்பிட வேண்டும்?


- மாதுளையை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். 
- மாதுளையை வெறும் வயிற்றில் உட்கொள்வது உடலுக்கு அதிக நன்மைகளை அளிக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
- மாதுளையை சாறாக உட்கொள்வதற்கு பதிலாக பழமாகவே உட்கொள்ளலாம்.
- மாதுளையின் தோலும் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- மாதுளை தோலை உலர்த்தி, பொடி செய்து, தண்ணீரில் கலந்து குடித்தால், கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Liver Health: கல்லீரலை காலி செய்யும்... சில ஆபத்தான காலை பழக்கங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ