Health Tips: தவறான உணவுப் பழக்கம் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக சர்க்கரை நோய் மக்களிடையே கரையான் போல் பரவி வருகிறது. இந்த நோய் படிப்படியாக உடலை தாக்குகிறது. நீரிழிவு கணையம், இதயம், சிறுநீரகம், கண்கள் மற்றும் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்துகிறது. நீரிழிவு நோயை முற்றிலுமாக சரி செய்ய முடியாது. ஆனால், உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலமும், உங்கள் உணவு முறையை மாற்றுவதன் மூலமும் அதை கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீரிழிவு நோயின் அறிகுறிகள் (Symptoms of Diabetes):


நீரிழிவு நோயின் (Diabetes) அறிகுறிகளை பலரால் விரைவாக புரிந்து கொள்ள முடிவதில்லை. சர்க்கரை நோய்க்கு பல அறிகுறிகள் இருக்கின்றன. இருப்பினும், சிறுநீரை வைத்தே சர்க்கரை நோயை கண்டறியலாம் என்பது தெரியுமா? சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகளில் சிலவற்றை நீங்கள் உணர்ந்தால், உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.


சிறுநீரில் காணப்படும் உயர் இரத்த சர்க்கரையின் அறிகுறிகள் இவை (Pre Diabetes Signs in Urine)
 
அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Frequent Urination): 


தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருந்தாலும், அடிக்கடி சிறுநீர் (Urine) கழிப்பது நீரிழிவு நோயின் அறிகுறியாகும். இதை அலட்சியம் செய்யக்கூடாது.


சிறுநீரில் இருந்து துர்நாற்றம்: 


சிறுநீர் கழிக்கும் போது உங்கள் சிறுநீர் துர்நாற்றம் வீசி, இப்படி தினமும் நடந்தால், அது உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான அறிகுறி என்பதை புரிந்து கொள்ளுங்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உடனடியாக உங்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | Dental Health: தினமும் இருமுறை பல் விளக்கினால் என்ன ஆகும்? இதையும் தெரிஞ்சுக்கோங்க!


சிறுநீரின் நிறத்தில் மாற்றம்: 


உங்கள் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாக (Colour Change) மாறியிருந்தால், அதில் வெள்ளை நிறத்தின் அளவு அதிகரித்திருந்தால், இவை நீரிழிவு நோய்க்கு முந்தைய அறிகுறிகளாகும். நீரிழிவு உங்கள் சிறுநீரகங்களை நேரடியாக பாதிக்கிறது. இது உங்கள் உடலில் புரதத்தின் அளவை அதிகரிக்கிறது, இதன் காரணமாக சிறுநீரின் நிறம் மாறத் தொடங்குகிறது.
 
அதிகப்படியான நுரை: 


சிறுநீர் கழிக்கும் போது அதிகப்படியான நுரை தோன்றினால், அது உடலில் அதிகப்படியான புரதத்தின் அறிகுறியாகும். இது சிறுநீரகத்தில் நீரிழிவு நோயின் தாக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம். ஆகையால் இந்த அறிகுறி இருந்தால், நீங்கள் ஒரு முறை கண்டிப்பாக மருத்துவரை அணுகி, நீரிழிவு நோய் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். 
 
உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள இப்படி கவனித்துக் கொள்ளுங்கள்


உங்களின் உணவுப் பழக்கத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். உங்கள் டயட்டில் ஆரோக்கியமற்ற உணவுகள் இருந்தால் அவற்றை மாற்றவும். இனிப்ப்பு வகைகளை மிகக் குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள். மேலும் தினமும் உடற்பயிற்சி (Exercise) செய்யுங்கள். மன அழுத்தத்தை முடிந்தவரை தவிர்க்கவும். உங்கள் சர்க்கரை அளவை தொடர்ந்து சரிபார்க்கவும். இரவில் தாமதமாக தூங்க வேண்டாம். உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்
 
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்


இலவங்கப்பட்டை மற்றும் அர்ஜுனா பட்டை தண்ணீர் குடிக்கவும். வெந்தயம், பெருஞ்சீரகம், பாகற்காய், டர்னிப், ஆளிவிதை, கருப்பட்டி, இலவங்கப்பட்டை, நெல்லிக்காய், முருங்கை இலை, வேம்பு ஆகியவற்றை உட்கொள்ளவும். காய்கள் மற்றும் பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும்  படிக்க | Guava vs Uric Acid: யூரிக் அமிலத்திற்கு சவால் விடும் கொய்யா இலைகள்! இது மூலிகையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ