Foods For Dental Care: ஆரோக்கியமான உறுதியான பற்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் ஆகும். தினந்தோறும் இருமுறை பற்களை விலக்குவது மட்டும் போதுமானதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். பற்களை ஆரோக்கியமாக பாதுகாப்பதில் வைட்டமின்களின் பங்கு மிக அதிகமான ஒன்று. உயிருள்ள அமைப்பான பற்களை பாதுகாத்துக் கொள்ளவும், அவை மறு உற்பத்தி செய்யவும், ஆரோக்கியமாக இருக்கவும், பல் எனாமலை தகவமைத்துக் கொள்ளவும் ஊட்டச்சத்துகள் அவசியம்.போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்காவிட்டால் பற்களின் ஆரோக்கியம் கெட்டுப்போய்விடும்.
பற்களில் துளைகள் ஏற்பட்டு அவை உடைவதற்கும், கெட்டுப்போவதற்கும் காரணமாக உள்ளது சர்க்கரை மட்டுமல்ல. போதுமான அளவில் ஊட்டச்சத்துகள் கிடைக்காததும் தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆரோக்கியமான பற்களை பெற 4 முக்கிய வைட்டமின்கள் அவசியம், அந்த வைட்டமின்கள் அடங்கியுள்ள சில முக்கிய உணவுப் பொருட்களைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
வைட்டமின் A : கேரட்டில் பீட்டா கரோட்டீன்கள் நிறைந்து காணப்படுகிறது. அரை கப் பச்சை கேரட்டில் 459 mcg அளவிற்கு வைட்டமின் ஏ காணப்படுகிறது. கேரட்டில் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
மேலும் படிக்க | செரிமானம், இதயம், எடை இழப்பு... பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு வேர்க்கடலை!!
வைட்டமின் D : கொழுத்த மீன், காளான், பால், சூரிய ஒளியில் வைட்டமின் “டி” அதிக அளவில் உள்ளது. மூளை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின் டி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான இந்த வைட்டமின், நோய்த்தொற்றுகளைக் குறைக்கிறது பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வைட்டமின் டி, போதுமான அளவு இல்லை என்றால், பற்களின் வலிமை குறைந்துபோகும். பல் உடையும் வாய்ப்புகள் அதிகரிக்கும். வைட்டமின் டி, சூரிய ஒளியில் அதிக அளவு உள்ளது. தினசரி வெளிச்சத்தில் அதிக நேரம் செலவிடுவது உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்க உதவுகிறது. காளான்களில் வைட்டமின் டி அபரிதமாக உள்ளது.
வைட்டமின் K2 : வைட்டமின் கே 2 என்பது வைட்டமின் கே 1 ஐ காட்டிலும் மிக குறைவான உணவுகளில் உள்ளது. இது மிகவும் முக்கியமானது உடலில் பலவகையான சுகாதார விளைவுகளை கொண்டுள்ளது. வைட்டமின் கே 2 ஊட்டச்சத்து குறைபாடு பலருக்கும் தெரியாமல் உள்ளது. ஏனெனில் இந்த ஊட்டச்சத்தை நாம் கவனிப்பது இல்லை. இந்த வைட்டமின் கே 2, மிருதுவான பாலாடைக்கட்டி, முட்டை, வெண்ணெய், ஈரல் மற்றும் சாலமி ஆகியவற்றில் உள்ளது.
மேலும் படிக்க | Papaya: குளிர்காலத்தில் பப்பாளியை இப்படி சாப்பிட்டால் ‘3’ நோய்கள் வரவே வராது!
வைட்டமின் E : வைட்டமின் குடும்பத்தில், கொழுப்பு-கரையக்கூடிய கலவை வைட்டமின் ஈ உடலை செல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. எனவே, வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். கீரை, பிரக்கோலி மற்றும் கொட்டைகள் டர்னிப் கீரை, பீட் கீரை, கடுகுக்கீரையில் வைட்டமின் ஈ உள்ளது, இது உணவு தேவைகளுக்கு ஏற்றதாக அமைகிறது.
சரி விகித அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான பற்களை மட்டுமல்லாது சிறப்பான உடல்வாகு மற்றும் ஒளிரும் சருமத்தையும் பெறமுடியும் .
(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Vitamins: ஆரோக்கியத்திற்கு அடிப்படையான வைட்டமின்கள்! இவற்றுக்கு மாற்று இருக்கா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ