Side Effects of Cucumber: வெயிலும் மழையும் இணைந்து மக்களை படுத்தும் காலம் இது. இந்த காலத்தில் பொதுவாக காற்றிலும் அதிக ஈரப்பதம் இருக்கும். இதன் காரணமாக அதிகமாக வியர்க்கும். இதனால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட நேரங்களில் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பருவத்தில், பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் வெள்ளரிக்காய் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள். இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால், இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும் செரிமானத்திலும் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது. ஆனால், வெள்ளரியால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மைகள் ஏற்பட்டாலும், இதை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. இதனால் பல வித பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.


வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானது


இந்தியாவின் பிரபல உணவியல் நிபுணர் டாக்டர் ஆயுஷி யாதவ் ஜீ நியூசிடம் இது குறித்து பேசியுள்ளார். வெள்ளரிக்காய் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் பொட்டாசியம் அளவு அதிகரிக்கிறது என்றும் இது ஹைபர்கேமியாவின் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். பலர் சாலட் சாப்பிடும் போது சில கசப்பான வெள்ளரிக்காய் துண்டுகளை மென்று சாப்பிடுகிறார்கள். இதனால் டிரைடர்பெனாய்டுகள் (Triterpenoids), டெட்ராசைக்ளிக் (Tetracyclic) மற்றும் குக்குர்பிட்டசின்கள் (Cucurbitacins) போன்ற நச்சுகள் வயிற்றில் நுழைந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.


மேலும் படிக்க | லுடீன் சத்து நிறைந்த மிளகாய்... உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்


வெள்ளரிக்காயின் பக்க விளைவுகள் பற்றிய விவரம் இதோ:


வயிறு உப்புசம்


வெள்ளரியில் குக்குர்பிடாசின் (Cucurbitacin) என்ற தனிமம் உள்ளது. இதன் காரணமாக பலருக்கு அஜீரண பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காய் அதிகமாக சாப்பிட்டால் வயிற்று உப்புசம் (Bloating) ஏற்படும். இது சில சமயங்களில் செரிமானத்திலும் பிரச்சனைகளை உருவாக்கும்.


நீர் இழப்பு


வெள்ளரிக்காயில் (Cucumber) அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. இதை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து கிடைக்கிறது. ஆனால் இது டையூரிடிக் தன்மையைக் கொண்டிருப்பதால், இதை அதிக அளவில் உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் இதன் காரணமாக உடலில் இருந்து திரவம் விரைவாக வெளியேறத் தொடங்குகிறது. இது நீர் இழப்புக்கு (Dehydration) காரணம் ஆகலாம்.


கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்து


கர்ப்பிணிப் பெண்களும் (Pregnant Women) வெள்ளரிக்காயை ஒரு அள்விற்கு மேல் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதை உட்கொள்வதால், சிறிய இடைவெளிகளில் சிறுநீர் வெளியேறி, உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். இது தவிர, வெள்ளரிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வயிற்றில் இது உப்பசத்தையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.


மேலும் படிக்க | ஜிம், டயட் எதுவும் வேண்டாம்: ஈசியா எடை குறைய காலையில் இதை பண்ணுங்க பொதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ