Anemia: நம் உடலில் இரத்தத்தின் குறைபாடு ஏற்பட்டால் அது இரத்த சோகை அதாவது அனீமியா என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்களில் இரத்த சோகை ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை உடலில் குறையும் பொழுது இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. உடலுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க இரத்த சிவப்பணுக்கள் தேவைப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும்போது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் குறைபாடு ஏற்படுகிறது. இரத்த சோகை (Anemia) பலவகை பட்டது. இதில், இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் உருவாகும் இரத்த சோகை, பர்னிஷியஸ் அனீமியா அதாவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரத்த சோகை மற்றும் சிக்கல் செல் அனீமியா ஆகியவை அடங்கும். 


ஒருவருக்கு இரத்த சோகை ஏற்பட்டால், உடல் அதற்கான சில அறிகுறிகளை காண்பிக்கும். இவை தென்பட்டவுடன் மருத்துவரிடம்  உடனடியாக சென்று அதற்கான சிகிச்சையை எடுக்க வேண்டியது அவசியமாகும். இரத்த சோக இருந்தால் நம் உடலில் தெரியக்கூடிய அறிகுறிகள் பற்றி இங்கு காணலாம்.


- உடல் சோர்வு
- மயக்கம் வருதல்
- மூச்சு வாங்குவதில் சிரமம்
- மஞ்சள் நிறத்தோல்
- தலைவலி
- நகங்கள் மஞ்சள் நிறமாதல்
- உடல் எடை குறைதல்
- எப்பொழுதும் உடல் குளிர்ச்சியாக இருப்பது
- நாக்கு சிவப்பு நிறமாக மாறுவது


இவற்றில் ஏதாவது அறிகுறிகள் உங்களுக்கும் இருந்தால் உடனடியாக மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது. இரத்த சோகைக்கான சிகிச்சை அதன் வகை மற்றும் காரணத்தை பொறுத்தது. இரும்புச்சத்து (Iron) குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையை சரி செய்ய பொதுவாக இரும்பு சப்ளிமெண்ட்ஸ் அளிக்கப்படுகின்றன. பர்னிஷியஸ் இரத்த சோகைக்கு வைட்டமின் பி12 இன்ஜெக்ஷன்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. சிக்கல் செல் இரத்த சோகைக்கான சிகிச்சை பலவித மருந்துகள் மற்றும் இரத்த பரிமாற்றம் மூலம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | No Sugar Challenge: சர்க்கரைக்கு நோ சொன்னா கிடைக்கும் நன்மைகளின் லிஸ்ட் இதோ


இரத்த சோகை வராமல் இருக்க நாம் சில நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக எடுக்கலாம். இரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதற்காக நாம் செய்யக்கூடியவை பற்றி இங்கு காணலாம்.


- இரும்புச் சத்த நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும்:
பச்சைக்காரிகள் காய்கறிகள் (Green Vegetables), சிவப்பு இறைச்சி (Read Meat), பீன்ஸ் வகைகள் ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இவற்றை உட்கொள்வது நல்லது.


- வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும்:
வைட்டமின் சி (Vitamin C) நிறைந்த புளிப்பான பழங்கள், தக்காளி ஆகியவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் இவற்றை உட்கொள்ளலாம்.


- ஆரோக்கியமான உணவு
பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், பால் பொருட்கள் ஆகிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியமாகும்.


இரத்த சோகை மட்டுமல்லாமல் நீரிழிவு நோய், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் ஆகியவையும் இந்நாட்களில் பலரை ஆட்கொள்கின்றன. 


ரத்த சோகை மட்டுமல்லாமல் பொதுவாக பலவித பிரச்சனைகளை தடுக்க நாம் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்


- ஆரோக்கியமான வாழ்க்கை முறை


ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம், தேவையான உடற்பயிற்சி, உடல் செயல்பாடு ஆகியவை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும்


- அவ்வப்போது உடற்ப பரிசோதனை செய்து கொள்ளுங்கள்


குறிப்பிட்ட இடைவெளியில் உடல் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம், ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் அதை சரியான நேரத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சையும் சரியான நேரத்தில் மேற்கொள்ளலாம்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சத்துக்கள் நீக்கப்பட்ட மைதாவை அளவுக்கு அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் மோசமான விளைவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ