கிட்ட வரும் நோய்களை மொத்தமாக காலி செய்யும் காய்கறி சாறுகள்: கண்டிப்பா குடிங்க!!

Health Benefits of Vegetable Juices: பலவித ஊட்டச்சத்துகளை நம் உடலுக்கு அளித்து நமது உடலை புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் சில காய்கறி சாறுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 29, 2024, 03:07 PM IST
  • புடலங்காய் நமது செரிமான அமைப்பை சீராக்குகிறது.
  • இது நமது இரத்தத்தில் இருக்கும் உப்பு, சக்கரை காரம் ஆகிவற்றின் ஏற்ற இறக்கங்களை சரி செய்கிறது.
  • கண்பார்வையில் பிரச்சனை உள்ளவர்களுக்கும் புடலங்காய் சாறு ஏற்றதாக இருக்கும்.
கிட்ட வரும் நோய்களை மொத்தமாக காலி செய்யும் காய்கறி சாறுகள்: கண்டிப்பா குடிங்க!!

Health Benefits of Vegetable Juices: நமது உடல் ஆரோக்கியத்திற்கு காய்களும் பழங்களும் மிக முக்கியமானவை. இவற்றில் பலவிதமான சத்துக்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. நமது தினசரி உணவில் காய்களையும் பழங்களையும் சேர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். 

Add Zee News as a Preferred Source

பொதுவாக காய்களை நாம் சாம்பார், கூட்டு, பொரியல் என்று பல வகைகளில் உணவில் சேர்க்கிறோம். இவை தவிர காய்கறி சாறுகளும் (Vegetable Juice) உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கும். இவற்றின் மூலம் நம் உடலுக்கு தேவையான ஆற்றலும் புத்துணர்ச்சியும் கிடைக்கின்றது. பலவித ஊட்டச்சத்துகளை நம் உடலுக்கு அளித்து நமது உடலை புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் சில காய்கறி சாறுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பீட்ரூட் சாறு 

பீட்ரூட்டில் (Beetroot) வைட்டமின் சி மற்றும் கே அதிகமாக உள்ளன. இதில் இரும்பு சத்தும் அதிகமாக உள்ளது. இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் காலையில் ஒரு டம்ளர் பீட்ரூட் சாறு கண்டிப்பாக குடிக்க வேண்டும். இதனால் ரத்த ஓட்டமும் சீராகி உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். மேலும் இது கெட்ட கொலஸ்ட்ராலையும் உடலில் இருந்து வெளியேற்றுகிறது

புடலங்காய் சாறு

புடலங்காய் (Snake Gourd) நமது செரிமான அமைப்பை சீராக்குகிறது. இது நமது இரத்தத்தில் இருக்கும் உப்பு, சக்கரை காரம் ஆகிவற்றின் ஏற்ற இறக்கங்களை சரி செய்கிறது. கண்பார்வையில் பிரச்சனை உள்ளவர்களுக்கும் புடலங்காய் சாறு ஏற்றதாக இருக்கும்.

பாகற்காய் சாறு 

கசப்பான சுவை கொண்ட பாகற்காய் (Bitter Gourd) சாறு நம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கின்றது. இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதுடன் நம் உடலுக்கு தேவையான பிற ஊட்டச்சத்துக்களையும் இது வழங்குகிறது.

மேலும் படிக்க | உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க... இந்த காய்கறி ஜூஸ்கள் உதவும்!

முள்ளங்கி சாறு 

இரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் முள்ளங்கி (Radish) சாறு உட்கொள்ளலாம். இது உடலின் நீர்ச்சத்தையும் அதிகரிக்கிறது. காலையில் இருக்கும் சோர்வு நீங்க இதை தினமும் காலையில் குடிக்கலாம்.

தக்காளி சாறு 

பலவித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தக்காளி (Tomato) சாறு தினமும் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். இது இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

வாழைத்தண்டு சாறு

வாழைத்தண்டை (Banana Stem) வெட்டி அரைத்து வடிகட்டி சாறு தயார் செய்து குடித்து வரலாம். இது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை அகற்றும் வல்லமை கொண்டது. சிறுநீரகக் கல்லையும் இது எளிதாக கரைத்து விடுகிறது. இதைத்தவிர இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இது செரிமானத்தையும் சீராக்கும்

கேரட் சாறு

அதிக அளவு பீட்டா கரோட்டின் உள்ள கேரட் (Carrot) சாறு நமது சருமம், கண்பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்

முட்டைக்கோஸ் சாறு

முட்டைகோஸில் (Cabbage) இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை அரைத்து வடிகட்டி சாராக உட்கொள்ளலாம். இதை கொதிக்க வைத்து அதில் உப்பு மிளகு சேர்த்து சூப்பாக சாப்பிடலாம். செரிமானத்தை சீராக்குவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகப்படுத்துகிறது.

மேலும் படிக்க | ஆண்கள் யோகாசனம் செய்யலாமா? அப்படி செய்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News