Diabetes Symptoms For Women : முன்னர், வயதானவர்களுக்கும் நடுத்தர வயதை கடந்தவர்களுக்கும்தான் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டு கொண்டிருந்தது. ஆனால் இப்போது பல இளம் வயதினரையும் இந்த நோய் பாதிப்பு ஆட்கொண்டு விடுகிறது. இது, வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு நோய் பாதிப்பாக பார்க்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. ரத்த ஓட்டத்தில் இருக்கும் அனைத்தும் சர்க்க்ரரையையும் உடலால் செயல்படுத்த முடியாத சமயத்தில் இந்த நோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீரிழிவு நோய்களின் வகைகள்:


நீரிழிவு நோயில், டைப் 1 மற்றும் டைட் 2 என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில், டைப் 1 வகை, கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை நிறுத்துகிறது. எனவே இதனால் குளூகோஸ் ரத்த ஓட்டத்தில் குவிந்து காணப்படுகிறது. இதற்கு மரபணு தொடர்பான காரணங்கள் இருக்கலாம் என மருத்துவ அறிஞர்கள் கணித்தாலும், சரியான காரணம் இன்னும் புலப்படவில்லை. 


டைப் 2 நீரிழிவு நோயில் கணையத்தில் போதுமான இன்சுலின் அளவு உற்பத்தி செய்யப்படாது. இதனால், உடலில் சரியாக செயல்பட வேண்டிய ஹார்மோன்கள் சரியாக செயல்படாமல் போகலாம். இந்த வகையான நீரிழிவு நோய்கள், நடுத்தர வயது உடையவர்களுக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும் வரும். மேலும், உட்கார்ந்தே வேலை செய்யும் இளைஞர்களுக்கும் கூட இந்த பிரச்சனை வரலாம். 


சர்க்கரை நோய் வந்தற்கான அறிகுறிகள்..(பெண்களுக்கானது)


சர்க்கரை நோய் வந்திருக்கிறதா இல்லையா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். இந்த அறிகுறிகள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வேறுபடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த அறிகுறிகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.


>அதிகமாக தாகம் எடுப்பது:


சர்க்கரை நோய் வந்தவர்கள் சிலருக்கு, எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் குறையாதது போன்ற உணர்வு இருக்கும். இது, நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். அப்படி தாகம் எடுப்பது அவர்களுக்கே புதிதாக தோன்றலாம். இருப்பினும், ஒரு சிலரின் உடலை பொறுத்தும் இந்த அறிகுறி மாறுபடலாம். 


>பிறப்புறுப்பில் தொற்று: 


பல பெண்களுக்கு பிறப்புறுப்பில் தொற்று வருவது சகஜம். இதனை Yeast Infection என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். நீரிழிவு நோய் வந்த பெண்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டால் அவ்வளவு எளிதில் நீங்காது என கூறப்படுகிறது. அப்படியே அதிலிருந்து மீண்டாலும், அடிக்கடி இந்த தொற்றினால் பாதிக்கப்படுவர் என்றும் சில மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | Summer Tips: கடும் கோடையிலும் உடலை கூலாக வைத்திருக்க... சில சூப்பர் உணவுகள்!


>UTI பிரச்சனை:


அதிக சுகர் லெவல் இருக்கும் பெண்கள், சிறுநீர் பாதை தொற்று (Urinary tract infection) ஏற்படலாம். இது, பொதுவான அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே மருத்துவரிடம் இது குறித்து ஆலோசனை செய்து பின்னர் சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும். 


>உடலுறவில் நாட்டமின்மை:


நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு உடலுறவில் நாட்டம் (Sex Drive) குறைந்து காணப்படலாம். நீரிழிவு நோய் பாதிப்பினால் நரம்பு பாதிக்கப்பட்டு பிறப்புறுப்பு பகுதி காய்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தலாம். இதனால் நாட்டமின்மை ஏற்படலாம். 


>அதிக ரத்தப்போக்கு:


மாதவிடாய் சமயங்களில், நீரிழிவு நோய் உள்ள பெண்களுக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஹார்மோன் மாறுபாடுகள் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம். 


>பிற அறிகுறிகள்:


காரணமற்ற உடல் எடை இழப்ப், தோல் நிறம் மாறுதல், கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் போன்ற பிரச்சனைகளும் நீரிழிவிற்கான அறிகுறியாக இருக்கலாம். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சவால் விடும் சுகர் லெவலை சுலபமாக குறைக்க இந்த இலைகளை சாப்பிடுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ