கொரோனாவுக்கு அண்ணன் Brucellosis, இந்தியாவிலும் பாதிப்பைத் தொடங்கிவிட்டதா?
சீனாவின் ஜுங்மு லான்ஜோ உயிரியல் மருந்து தொழிற்சாலையில் (Zhongmu Lanzhou biological pharmaceutical factory) ஏற்பட்ட கசிவால் புருசெல்லோசிஸ் பரவியதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு ஜூலை பிற்பகுதியில் தொடங்கி, ஆகஸ்ட் பிற்பகுதிக்குள் ஏற்பட்டது.
சீனாவின் ஜுங்மு லான்ஜோ உயிரியல் மருந்து தொழிற்சாலையில் (Zhongmu Lanzhou biological pharmaceutical factory) ஏற்பட்ட கசிவால் புருசெல்லோசிஸ் பரவியதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு ஜூலை பிற்பகுதியில் தொடங்கி, ஆகஸ்ட் பிற்பகுதிக்குள் ஏற்பட்டது. இந்த தொழிற்சாலை விலங்குகளின் பயன்பாட்டிற்காக புருசெல்லா தடுப்பூசிகளை (Brucella vaccines) தயாரிக்கும் போது. காலாவதியான கிருமிநாசினிகள் மற்றும் சுத்தீகரிப்பன்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கழிவு வாயுவில் சில பாக்டீரியாக்கள் கசிந்தன என்று சி.என்.என் அறிக்கை தெரிவித்துள்ளது.
சீன நகரமான லான்ஜோவில் (Lanzhou) 3,000க்கும் அதிகமானவர்களுக்கு ப்ரூசெல்லோசிஸ் பாதிப்பு இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. கால்நடைகளுடன் தொடர்பு கொள்வதால் இந்த பாக்டீரியா பரவுகிறது.
ப்ரூசெல்லோசிஸ் பாதிக்கப்பட்ட யாருக்கும் உயிர் அபாயம் ஏதும் இதுவரை ஏற்படவில்லை. 2.9 மில்லியன் மக்கள்தொகைக் கொண்ட லான்சோவின் 21,847 பேரை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
"புருசெல்லோசிஸ் என்பது பல்வேறு ப்ரூசெல்லா இனங்களால் ஏற்படும் பாக்டீரியா தொற்றாகும், இது முக்கியமாக கால்நடைகள், பன்றிகள், ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் நாய்களைப் பாதிக்கிறது" என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
மால்டா காய்ச்சல் என்றும் அழைக்கப்படும் இந்த நோய், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நேரடி தொடர்பு மூலமாகவும், அசுத்தமான காற்றை சுவாசிப்பதன் மூலமாகவும் பரவுகிறது.
விலங்குகளின் unpasteurised பால் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற உணவுப் பொருட்களை உண்பதால் நோய் ஏற்படும். மனிதர்களில், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுவது மிகவும் அரிது என்று WHO கூறுகிறது.
Read Also | Dengue கொசுக்கள் கொரோனாவிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் தெரியுமா?
Brucellosis அறிகுறிகள் என்ன?
பொதுவாக நோய் ஏற்பட 2-4 வாரங்கள் ஆகலாம், ஆனால் நோய் வந்தால் அது 1 வாரம் முதல் 2 மாதங்கள் வரை இருக்கும். புருசெல்லோசிஸின் அறிகுறிகள் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் (Disease Control and Prevention (CDC)) கூறுபவை :
• காய்ச்சல்
• வியர்வை
• உடல்நலக்குறைவு
• அனோரெக்ஸியா
• தலைவலி
• தசைகள், மூட்டு மற்றும் / அல்லது முதுகில் வலி
• சோர்வு
Brucellosis ஏற்படுத்தும் பாதிப்புகள்:
மூட்டுவலி, கல்லீரலில் வீக்கம் மற்றும் விரைப்பைகளில் வீக்கம் போன்ற பல சிக்கல்களையும் புருசெல்லோசிஸ் ஏற்படுத்தும்.
பால் பொருட்களை பதப்படுத்துவது செய்வது அல்லது பால் சார்ந்த உணவுகளை உண்ணும் போது கவனமாக இருக்கவேண்டும்.
புருசெல்லோசிஸ் பரவுவதைத் தடுக்க கால்நடைகள், மற்றும் ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என WHO பரிந்துரைக்கிறது.
மாமிசங்களை நன்றாக சமைத்து சாப்பிடுவது இந்த பாக்டீரியா பரவாமல் இருப்பதற்கான உகந்த தடுப்பு நடவடிக்கையாக இருக்கும்.
இந்த பாக்டீரியா பொதுவாக ரத்தம், எலும்பு மஜ்ஜை அல்லது பிற உடல் திரவங்களின் மாதிரிகளை பரிசோதிப்பதன் மூலம் கண்டறியப்படுகிறது. "நோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகுதான் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியும்," என்று CDC கூறுகிறது.நோயின் தீவிரத்தை பொறுத்து, குணமடைய சில வாரங்கள் முதல் பல மாதங்கள் ஆகலாம் என்று CDC கூறுகிறது.
Read Also | Maharashtra: COVID-ஐ வென்று வீடு திரும்பிய 106 வயது மூதாட்டி