Dengue கொசுக்கள் கொரோனாவிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் தெரியுமா?

இந்த ஆண்டும், சென்ற ஆண்டு Dengue கொசுக்கள் கொரோனாவிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் தெரியுமா?  காய்ச்சல் பரவிய இடங்களில், கொரோனா வைரஸின் தாக்கத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 23, 2020, 06:09 PM IST
  • கோவிட் -19 வைரஸுக்கும், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுவுக்கும் இடையிலான உறவை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்...
  • டெங்குவிலிருந்து உருவாக்கப்பட்ட ஆன்டிபாடிகள் கொரோனாவுக்கு எதிராக செயல்படக்கூடும்...
  • டெங்கு தொற்று அல்லது டெங்கு தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக ஓரளவு நோயெதிர்ப்பு பாதுகாப்பை உருவாக்கக்கூடும்...
Dengue கொசுக்கள் கொரோனாவிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் தெரியுமா?    title=

புதுடெல்லி: கொரோனா தொற்றுநோய் பரவி கெட்ட செய்திகளையே கேட்டு நொந்து நூலாகும் நிலையில், ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. பிரேசிலில் (Brazil) கொரோனா வைரஸை (SARS-CoV-2) பகுப்பாய்வு செய்யும் புதிய ஆய்வில், கோவிட் -19 வைரஸுக்கும், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுவுக்கும் இடையிலான 

உறவை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு அறிக்கையின்படி, விஞ்ஞானிகள் கொசுக்களால் பரவும் டெங்குக் காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று கூறியுள்ளனர் . அதாவது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, Covid-19 நோயை பரப்பும் வைரஸை எதிர்த்துப் போராட ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  

இரண்டு வருட தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்த டியூக் பல்கலைக்கழகத்தின் (Duke University) பேராசிரியர் மிகுவல் நிக்கோலலிஸ் (Miguel Nicolales) தலைமையிலான குழுவினர் செய்த இந்த ஆய்வு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தத் தகவல் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துடன் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பரவுவதற்கான ஒப்பீட்டு புள்ளிவிவரத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வழங்கியுள்ளது. 

Also Read | Corona Virus: வதந்திகளும் கட்டுக்கதைகளும்... உண்மை என்ன?

டெங்குவிலிருந்து உருவாக்கப்பட்ட ஆன்டிபாடிகள் கொரோனாவுக்கு எதிராக செயல்படக்கூடும்

இந்த ஆண்டும், சென்ற ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவிய இடங்களில், கொரோனா வைரஸின் தாக்கத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. டெங்குவின் ஃபிளவிவைரஸ் செரோடைப் (flavivirus serotype) மற்றும் SARS-Ko-2 ஆகியவற்றுக்கு இடையில் நோயெதிர்ப்பு குறுக்கு-வினைத்திறனின் (immunological cross-reactivity) புதிரான சாத்தியம் இருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்த புள்ளிவிவரங்களும் மிகவும் சுவாரஸ்யமானவை என்று கூறுகிறார்பேராசிரியர் மிகுவல் நிக்கோலஸ். ஏனெனில் முந்தைய ஆராய்ச்சியில், ரத்தத்தில் டெங்கு காய்ச்சலின் ஆன்டிபாடிகள் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் ஆன்டிபாடி சோதனையில் பாஸிடிவ் என்று தவறாக கண்டறியப்படும் ஆச்சரிய நிகழ்வுகள் அதிக அளவில் இருந்தன. அதுவும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஒருபோதும் ஏற்படவில்லை என்ற நிலையில் இது ஒரு முக்கியமான விஷயமாக கவனிக்கப்பட்டது.  

டெங்கு தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும்
தற்போதைய ஆய்வு உண்மை என நிரூபிக்கப்பட்டால், இந்த கருதுகோள் டெங்கு தொற்று அல்லது டெங்கு தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக ஓரளவு நோயெதிர்ப்பு பாதுகாப்பை உருவாக்கக்கூடும் என்று பொருள் என்று பேராசிரியர் மிகுவல் நிக்கோலஸ் கூறுகிறார்.

உலகளவில் 3.5 மில்லியனைக் கடக்கும் கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ் பரவல் நிற்பதாகவே தெரியவில்லை. சீனாவிலிருந்து தோன்றிய இந்த ஆபத்தான வைரளின் தாக்கத்தால் உலகளவில் சுமார் 3.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  லட்சக்கணவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கவும் இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளன. மூன்றாம் இடத்தில் பிரேசில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலால் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த பிரேசிலின் பரானா, சாண்டா கேடரினா, ரியோ கிராண்டே டோ சுல் போன்ற பகுதிகளில், கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைவாகவே இருப்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். 

Also Read | Corona குளிர் காலத்தில் மின்னல் வேகத்தில் பரவும்; பீதியை கிளப்பும் வல்லுநர்கள்..!!!

Trending News