Immune Thrombocytopenic: இந்த நவீன காலகட்டத்தில் நம் வாழ்வில் வசதிகளும், முன்னேற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இவற்றுக்கு ஈடாக, பல வித நோய்களும் தினம் தினம் அதிகரிக்கின்றன. ,முன்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த பல நோய்கள் இப்போது பரவலாக காணப்படுகின்றன. அதிகம் அறியப்படாத ஆனால், ஆபத்தான அப்படி ஒரு நோயை பற்றி இந்த பதிவில் காணலாம், 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு நபருக்கு இரத்த பிளேட்லெட்களின் குறைபாடு ஏற்பட்டால், நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெயர் டெங்கு. ஒருவர் டெங்குவால் (Dengue) பாதிக்கபட்டால், அவருக்கு பிளேட்லெட்டுகள் (Platelets) குறைய ஆரம்பிக்கும் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். ஆனால், பிளேட்லெட் அளவு குறையும் மற்றொரு நோயும் உள்ளது. குருகிராமில் உள்ள மரிங்கோ ஆசியா மருத்துவமனையின் இன்டர்னல் மெடிசின் பிரிவின் ஹெச்ஓடி டாக்டர் எம் கே சிங் இந்த நோயை பற்றிய விவரங்களை அளித்துள்ளார். அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


“டெங்குவைத் தவிர, மற்றொரு நோய் ஏற்பட்டாலும் பிளேட்லெட்டுகளின் குறைபாடு (Platelet Deficiency) ஏற்படுவதாக டாக்டர் எம்.கே. சிங் கூறுகிறார். இந்த நோய் இம்யூன் த்ரோம்போசைட்டோபீனியா (ITP) ஆகும், இது ஒரு ஆட்டோ இம்யூன் நோயாகும். இந்த நோய் ஏற்பட்டால், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு பிளேட்லெட்டுகளைத் தாக்கும். இதன் காரணமாக அவற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது.” என டாக்டர் எம் கே சிங் கூறுகிறார்.


- இம்யூன் த்ரோம்போசைட்டோபீனியா நோயில், உடலின் நோயெதிர்ப்பு (Immunity) அமைப்பு பிளேட்லெட்டுகளை தவறாக புரிந்துகொண்டு, அவற்றை அழித்து விடுகின்றன. 
- பிளேட்லெட்டுகள் நமது இரத்தத்தில் உள்ள சிறிய செல்கள் ஆகும்.
- அவை இரத்தக் கட்டிகளை உருவாக்க உதவுகின்றன. 
- இரத்தக் கட்டிகள் இரத்தப்போக்கை நிறுத்தி காயங்கள் விரைவாக குணமடைய உதவுகின்றன. 
- உடலில் பிளேட்லெட்டுகளில் (Platelets) குறைபாடு ஏற்பட்டால், இரத்தக் கட்டிகளை உருவாக்கும் திறன் குறைகிறது. 
- இதன் காரணமாக இரத்தப்போக்கு அதிகரிக்கலாம்.
- காயம் குணமடையவும் அதிக நேரம் எடுக்கலாம்.


மேலும் படிக்க | Lungs Detox: நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்க... நீங்கள் செய்ய வேண்டியவை


Immune Thrombocytopenic: இதற்கான அறிகுறிகள் என்ன?


1- தோலில் தடிப்புகள் மற்றும் புள்ளிகள்: 


இரத்த பிளேட்லெட்டுகளின் (Blood Platelets) குறைபாடு ஏற்பட்டால், தோலில் சிறிய சிவப்பு தடிப்புகள் மற்றும் புள்ளிகள் தோன்றும். இந்த தடிப்புகள் எந்த காயங்களும் ஏற்படாமலேயே உருவாகலாம். இது மட்டுமின்றி இரத்தப்போக்கு காரணமாக தோலில் நீல அல்லது ஊதா நிற புள்ளிகள் தோன்றக்கூடும்.


- தசைகளில் இரத்தப்போக்கு: 


எந்த காயமும் இல்லாமலும் கூட தசைகளில் இரத்தப்போக்கு அல்லது வீக்கம் இருந்தால், அது இம்யூன் த்ரோம்போசைட்டோபீனியாவின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கு உடனடியாக கவனம் காட்ட வேண்டியது மிக அனசியமாகும்.


- மூக்கு மற்றும் வாயில் இருந்து இரத்தப்போக்கு: 


எந்த வித காரணமும் இல்லாமல் மூக்கு அல்லது வாயில் இருந்து இரத்தம் வருவதும் ITP இன் அறிகுறியாக இருக்கலாம்.


- அதிகப்படியான சோர்வு மற்றும் பலவீனம்: 


பிளேட்லெட்டுகளில் குறைபாடு ஏற்படுவதால், இரத்தக் கட்டிகளை உருவாக்கும் உடலின் திறன் குறைகிறது, இதன் காரணமாக அதிக சோர்வும் பலவீனமும் தோன்றகூடிய வாய்ப்புகள் உள்ளன. 


- உட்புற இரத்தப்போக்கு:


இந்த நோயால் உருவான நிலை தீவிரமானால், உட்புற இரத்தப்போக்கு (Internal Bleeding) ஏற்படலாம், இது வயிற்று வலி, தலைவலி மற்றும் வாந்தி ஆகிய வடிவங்களில் வெளிப்படும்.


Immune Thrombocytopenic: இதற்கான சிகிச்சை என்ன?


இம்யூன் த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்கு பல்வேறு வழிகளில் சிகிச்சையளிக்கலாம். மருந்துகள், பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான மருந்துகள் மற்றும் தீவிர நிலைகளுக்கு அறுவை சிகிச்சை உட்பட இதற்கு பல விதமான சிகிச்சைகள் உள்ளன.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  )


மேலும் படிக்க | எச்சரிக்கை... அளவிற்கு அதிகமான முட்டை ஆரோக்கியத்தை காலி செய்து விடும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ