Lungs Detox: நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்க... நீங்கள் செய்ய வேண்டியவை

Lungs Detox: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு ஆகியவை காரணமாக, பெரும்பாலானோருக்கு நுரையீரல் பலவீனமாக உள்ளது. சுவாசிப்பதில் சிரமம், இடைவிடாத இருமல் போன்றவை நமது நுரையீரலின் ஆரோக்கியம் நன்றாக இல்லை என்பதற்கான அறிகுறிகள்.

  • Sep 03, 2024, 15:58 PM IST

நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும். நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கவும் சில இயற்கை முறைகளை பின்பற்றுவது நல்லது.

1 /8

Lungs Detox: நமது சுவாசத்திற்கு ஆதாரமான நுரையீரலில், சேரும் நச்சுக்கள் மற்றும் அழுக்குகள் நுரையீரலை பலவீனப்படுத்தி, சாதாரண சளி இருமல் முதல் சுவாசப் பாதை தொற்று, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி வரை பலவிதமான கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில்,  நுரையீரலை இயற்கையாக சுத்தம் செய்ய உதவும் உணவுகளையும் பழக்கங்களையும் அறிந்து கொள்ளலாம். 

2 /8

மூலிகை தேநீர்: மஞ்சள், துளசி மற்றும் புதினா உள்ளிட்ட சில மூலிகைகளுக்கு நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் பண்புகள் உண்டு.  இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நமது நுரையீரலில் உள்ள அழுக்குகளையும் நச்சுக்களையும் அகற்ற பயனுள்ளதாக இருக்கும். தினமும் வெறும் வயிற்றில் இஞ்சி, மஞ்சள், துளசி அல்லது பிற மூலிகைகள் சேர்த்து கொதிக்க வைத்த தேநீர் குடிக்க வேண்டும்.

3 /8

வெல்லம்: சர்க்கரைக்கு ஆரோக்கியமான சிறந்த மாற்றாக கருதப்படும் வெல்லம், நுரையீரலை இயற்கையாக சுத்தப்படுத்தும். நுரையீரலில் சேரும் நிக்கோட்டினையும், பிற அழுக்குகளையும், நச்சுக்களையும்,  வெளியேற்றும் திறன் பெற்றது வெல்லம். 

4 /8

கிரீன் டீ பருகுவதால், நுரையீரல் டீடாக்ஸ் செய்யப்படுவதோடு, அதில் உள்ள வீக்கம் குறைந்து, மூச்சு திணறல் சரியாகும். நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை தடுக்கவும் கிரீன் டீ உதவும்.

5 /8

இஞ்சி: இஞ்சியில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், நுரையீரலை வலுப்படுத்தும். நுரையீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றி, நுரையீரலை சளி இருமல் முதல், பல கடுமையான நோய்கள் வரை எல்லாவற்றில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது.

6 /8

பிராணயாமம் பயிற்சி: பிராணாயாமம் மற்றும் மூச்சு பயிற்சிகள் நுரையீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும். நுரையீரல்  மட்டுமல்ல உடலின் மற்ற பாகங்களும் இதனால் பலனைப் பெறுகின்றன. இது உடலில் இருந்து கார்பன் டை ஆக்சைடை அகற்றுவதன் மூலம் உடலில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறது. தினமும் குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் பிராணாயாமம் பயிற்சி செய்வது நல்ல பலன் கொடுக்கும்.

7 /8

பசுமை நிறைந்த இடத்தில் நேரத்தை செலவிடுதல்: சுவாச அமைப்பு ஆரோக்கியமாக இருக்க, பூங்கா போன்ற பசுமையான பகுதியில் சிறிது நேரம் செலவிட வேண்டும். இங்கு அமர்ந்து சிறிது நேரம் சுவாசிப்பதால் நுரையீரலின் ஆரோக்கியம் மேம்படும். தினமும் 15 நிமிடம் இதைச் செய்வதன் மூலம், நுரையீரலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் நீங்கும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.