What Is Methanol? Illicit Liquor In Kallakurichi: கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்த 30க்கும் மேறப்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். மெத்தனால் என்றால் என்ன? இது குறித்த விவரத்தை பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 30க்கும் மேற்பட்டோர், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்திருக்கின்றனர். இதே போல கடந்த ஆண்டும் விழுப்புரத்தில் பலரது மரணத்திற்கு விஷ சாராயம் காரணமாக இருந்தது. இவர்களின் உயிரிழப்பிற்கு, கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.


கடந்த ஆண்டு விழுப்புரம்..இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி..!


கடந்த ஆண்டு, மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது பெரும் சர்ச்சையாக மாறியதை தொடர்ந்து இந்த வருடமும் அதே போன்ற ஒரு சம்பவம் நடைப்பெற்றிருக்கிறது. தற்போது, கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்த 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. 


உயிரிழப்பிற்கான காரணம்:


மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால்தான் கடந்த ஆண்டு விழுப்புரத்தில் பலர் உயிரிழந்தனர் என உடற்கூறாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல, இந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பிற்கும் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம்தான் காரணம் என கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், அவர்கள் குடித்த கள்ளச்சாராயத்தை ஆய்வு செய்ததில், அதில் மெத்தனால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 


மெத்தனால் என்றால் என்ன? 


மெத்தனாலை, மரச்சாராயம் என்றும் கூறுவர். இது, ஆல்கஹாலின் ஒரு வகையாகும். இது, எளிதில் தீப்பற்றக்கூடிய நீர்மங்களுள் ஒன்றாகும். இதற்கு நிறம் கிடையாது. லேசான திரவியங்களுள் ஒன்றான இது, ஆல்க்ஹால் போலவே போதை தரக்கூடியதாகும். இது, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய திரவங்களுள் ஒன்றாகும். இதை குடித்தவர்கள் விரைவில் இதை குணப்படுத்தக்கூடிய மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் உயிருக்கு ஆபத்துதான் என்று கூறப்படுகிறது. 


இதை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:


>குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உணர்வு ஏற்படும்
>வயிற்று வலி ஏற்படும்
>தலைவலி உணர்வு ஏற்படும்
>பார்வை மங்களாக தெரியும்
>குழப்பம் போன்ற மனநிலை உருவாகும்
>வலிப்பு ஏற்படலாம்
>தலைசுற்றல்-மயக்கம் போன்ற மனநிலை உருவாகும்
>இது முற்றினால், பின்பு மரணம் நிகழலாம்.


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!


கள்ளச்சாராயம் குடிக்க என்ன செய்ய வேண்டும்?


>குடித்த 24 மணி நேரத்திற்குள் மருத்துவ உதவியை நாட வேண்டும்
>வாந்தி வரவழைக்க வேண்டும்
>வேறு எதையும் குடிக்க கூடாது
>மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.


தமிழகத்தில் தடை செய்யப்பட்டதற்கான காரணங்கள்:


>விஷச்சாராயம், சட்டத்திற்கு புறம்பானது. 
>இந்தியாவில் விஷச்சாராயத்தால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால், இங்கு இதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது.
>உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.
>2023ஆம் ஆண்டில் மட்டும் பலர் இதனால் உயிரிழந்திருக்கின்றனர். 


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரம்: 34 பேர் மரணம்... உயரும் பலி எண்ணிக்கை! நிவாரணம் அறிவிக்கப்படுமா?


(பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதற்கு Zee News பொறுப்பேற்காது)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ