கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருப்பதால் அம்மாவட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 19, 2024, 07:43 PM IST
  • கள்ளக்குறிச்சியில் மிகப்பெரிய சோகம்
  • 8 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பு
  • மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்
கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு..! title=

கள்ளக்குறிச்சியில் சோகம்

தமிழகத்தில் கஞ்சா புழக்கம், கொலை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிந்ததாக செய்திகள் வெளியான நிலையில், இப்போது பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராய உயிரிழப்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க | ரயில் பயணிகளின் எமனாக மோடி உள்ளார்-சசிகாந்த் செந்தில் விமர்சனம்

கள்ளச்சாராய உயிரிழப்பு உயர்வு

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டு கருனாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக விற்பனை செய்யும் நபரே கள்ளச்சாராயம் விற்றதால், அவரிடம் 10க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்துள்ளனர். அந்த கள்ளச்சாராயம் குடித்த ஜெகதீஷ், பிரவீன் (29), சுரேஷ் (46), சேகர் என நான்கு பேர் உயிரிழந்தனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பலர் வாந்தி, மயக்கம், வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

தமிழக அரசு எடுத்த நடவடிக்கை

அதில் காலையிலேயே மேலும் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இப்போது சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இது கருனாபுரம் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வாழ்க்கையே ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டிருக்கும் நிலையில், தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

காவல் கண்காணிப்பாளர் இடைநீக்கம்

தற்போதைய சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கள்ளச்சாராய வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளச்சாராய விற்பனை கள்ளக்குறிச்சி, திருபத்தூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் இருப்பதாக பலரும் கூறி வந்தனர். ஆனால், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்ததே இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என பொதுமக்கள் ஆவேசத்துடன் குற்றம்சாட்டி வருகின்றனர். கள்ளச்சாராய விற்பனையில் காவல்துறையில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வளவு பெரிய சோகம் நடந்தும் பல இடங்களில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விறபனை நடந்து வருவதாகவும் பொதுமக்கள் ஆதங்கத்தோடு தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | திமுக கூட்டணி 40 எம்பிகள் வைத்து எதுவும் செய்யப் போவதில்லை - தங்கர்பச்சான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News