Health Tips: ஓசிடி எனப்படும் அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர் (Obsessive Compulsive Disorder) என்பது ஒரு மனப் பிரச்சனையாகும். இதில் எந்த காரணமும் இல்லாமல் பயம் மற்றும் பதட்டம் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கும். அவற்றின் மீது நமக்கு எந்த கட்டுப்பாடும் இருக்காது. ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வது OCD நோயின் மிகவும் பொதுவான அறிகுறியாகும். கைகள் சுத்தமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் கழுவுதல், ஒரு விஷயத்தை தொடர்ந்து மறுபரிசீலனை செய்வது, சில விஷயங்களில் உறுதியாக இல்லாமல் சந்தெகம் இருந்துகொண்டே இருப்பது போன்றவையும் பலருக்கு இருக்கும் அறிகுறிகளாகும். நாம் மீண்டும் மீண்டும் செய்யும் பல செயல்பாடுகள் உள்ளன. பல சமயங்களில், இந்த பழக்கவழக்கங்களால், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பிரச்சனைகளைச் சந்திக்கத் தொடங்குவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர் என்றால் என்ன (What is Obsessive Compulsive Disorder) 


ஒ.சி.டி (OCD) என்பதை பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு அல்லது எண்ண சுழற்சி நோய் என்று குறிப்பிடலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவறான அல்லது கெட்ட எண்ணங்கள் வரக்கூடும். பல சமயங்களில் அர்த்தமே இல்லாத விஷயங்கள் மனதில் ஓடும். சில வேலைகளைச் செய்தாலும், அவற்றை செய்யாதது போன்ற உணர்வு ஏற்படும். இப்படி அடிக்கடி செய்வதால், இந்த நபர்களுக்கு மன அழுத்தம் அல்லது கவலை உணர்வு இருக்கிறது. 


ஓசிடி வருவதற்கான காரணங்கள் (Reasons for OCD) 


எந்த வேலையிலும் அல்லது விஷயத்திலும் சமநிலை இல்லாதபோது ஒ.சி.டி (Obsessive Compulsive Disorder) பிரச்சனை ஏற்படுகிறது. இது மரபணு ரீதியாகவும் ஏற்படலாம். பல சமயங்களில் மூளையின் அமைப்பு, உடலின் மரபணுக்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை இதற்குப் பெரிதும் காரணமாகின்றன.


மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க உதவும் ‘சூப்பர்’ பழங்கள்!


OCD: இதன் அறிகுறிகள் என்ன?


- அடிக்கடி கைகளை கழுவுதல்.


- அனைத்தும் அழுக்காக இருப்பது போல நினைப்பது, உதாரணமாக, பல சமயங்களில் வீட்டைச் சுத்தம் செய்த பிறகும் வீடு அழுக்காகவே இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவது.


- எப்பொழுதும் மற்றவர் நாம் பேசியது தவறாக தோன்றுமோ என அச்சப்படுவது.


- ஒரு மின்சாதனப் பொருள் அணைக்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் இயக்கத்தில் இருப்பதைப் போலவும், அதை திருப்பி சென்று பார்க்க வேண்டும் என்பது போலவும் உணர்வது. 


- திடமான ஒரு முடிவு எடுப்பதில் சிரமம் எற்படுவது. 


OCD க்கு சரியான சிகிச்சை என்ன? (Treatment for OCD)


இந்த நோயில், நோயாளிகளுக்கு உளவியல் சிகிச்சை மற்றும் ஆலோசனையுடன் மருந்துகளும் வழங்கப்படுகின்றன. மருத்துவரின் மேற்பார்வை அல்லது ஆலோசனையின்றி எந்த சிகிச்சையும் எடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களை சரியான முறையில் பார்த்துக்கொள்ள, நோயாளிக்கு படிக்க புத்தகம் கொடுக்கலாம், லேசான உடற்பயிற்சி செய்ய வைக்கலாம், அமைதியான சூழலில் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லலாம். இவை அனைத்தையும் செய்வதன் மூலம் இந்த நோய்க்கு நிவாரணமும் உதவியும் கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கல்லீரலில் நச்சுக்கள் அதிகமாகிவிட்டதை காட்டும் ‘ஆபத்தான’ அறிகுறிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ