COVID-19-க்கு தடுப்பு மருந்து தயார் என அதிபர் டிரம்ப் கூறுவது உண்மையா?
கொரோனா தடுப்பூசியை தயாரித்துவிட்டதா அமெரிக்கா? 20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதன் உண்மை நிலை என்ன?
கொரோனா தடுப்பூசியை தயாரித்துவிட்டதா அமெரிக்கா? 20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதன் உண்மை நிலை என்ன?
உலகின் பல நாடுகள் தடுப்பூசிகளை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளன. 100 க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் தற்போது சோதனைக் கட்டத்தில் உள்ளன. உலகின் ஒவ்வொரு நாடும் கொரோனா தொற்றுநோயுடன் போராடிவரும் வேளையில், இதற்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஜி 7 உச்சிமாநாட்டை ஒத்திவைத்த டொனால்ட் டிரம்ப்; இந்தியாவை குழுவில் சேர்க்க வேண்டும்
இதற்கிடையில், COVID-19 வைரஸிற்கான தடுப்பு மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 3 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர். உலக அளவில் அதிக கொரோனா தொற்றுகளை பதிவு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த செய்தி, மற்ற நாடுகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதை விடவும் அமெரிக்கர்களையே பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, 20 லட்சம் டோஸ் மருந்துகளை அமெரிக்கா தயாரித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் - டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு சோதனைகள் ஆக்கபூர்வமான விளைவுகளை கொடுத்தால், மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்புமருந்துகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக கூறிய அதிபர் - டொனால்ட் டிரம்ப்., தங்கள் சிறந்த முறையில் பணியாற்றியுள்ளதாகவும், இரண்டு மில்லியன் தடுப்பூசிகளை தயார் செய்துள்ளோம். இப்போது மக்களுக்கு அதை அனுப்பும் பணி எஞ்சியுள்ளது என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வென்டிலேட்டரை நன்கொடையாக அளிக்கும் அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப்...
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்வதற்காக டிரம்ப் நிர்வாகம் ஐந்து நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. மாடர்னா இன்க்., அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி, ஃபைசர் இன்க்., ஜான்சன் & ஜான்சன் மற்றும் மெர்க் & கோ இன்க் (Moderna Inc., AstraZeneca plc, Pfizer Inc., Johnson & Johnson, Merck & Co Inc) என 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது.
கொரோனா வைரஸின் ஐந்து நிறுவனங்களும், தடுப்பு மருந்துகளை செவ்வெனே தயாரிக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதிபர் - டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நிறுவனங்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், தளவாடங்கள் மற்றும் நிதி உதவிகளும் வழங்கப்படும். எனினும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக கூறும் எந்தவொரு தடுப்பு மருந்துகளுக்கும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் கொரோனா வைரஸைத் தடுக்கும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகளில் 100-க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பு மருந்தின் மருத்துவ சோதனை மிகச் சிறந்த முடிவுகளைத் தந்துள்ளதால், அது இந்த தடுப்பு மருந்தின், இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை என்ற நிலையை எட்டியுள்ளதாக மாடர்னா இன்க் நிறுவனம் கூறுகிறது. கொரோனா தொற்றுநோய் தடுப்பு மருந்து விரைவில் சந்தையில் கிடைக்கும் என்றும் உலகம் இந்த வைரஸிலிருந்து விடுபட முடியும் என்றும் நம்பப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அமெரிக்க அதிபருடன் பேசினார் PM மோடி...
உலகில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 6.7 மில்லியனை எட்டியுள்ளது. 3 லட்சம் 91 ஆயிரம் 20 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் 30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவிலும் பெரும்பாலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொழியாக்கம் - மாலதி தமிழ்ச்செல்வன்