‘இந்த’ நேரத்தில் டின்னர் சாப்பிட்டால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்! எப்போ தெரியுமா?
உடல் எடையை குறைப்பதற்கு நாம் சில முயற்சிகளை எடுப்பது மிகவும் முக்கிமாகும். அப்படிப்பட்ட முயற்சிகளுள் ஒன்றுதான், சரியான சமயத்தில் டின்னர் சாப்பிடுவது.
சமீப காலமாக, மக்கள் பலருக்கு, உடல் எடை அதிகரிப்பு குறித்தும், அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் விழிப்புணர்வு வந்துள்ளது. உடலிலும் வரும் பல்வேறு பாதிப்புகளுக்கு உடல் எடை அதிகரிப்புதான் காரணம் என்பதை தெரிந்து கொண்ட மக்கள், தற்போது ஹெல்தியான உணவு பழக்கத்தையும், உடற்பயிற்சிகளையும் நோக்கி அடியெடுத்து வைத்திருக்கின்றனர். உடல் எடையை குறைக்கும் முயற்சி, டயட் இருப்பது, உடற்பயிற்சி செய்வது மட்டுமல்ல, சரியான நேரத்திற்கு சாப்பிடுவதிலும் இருக்கிறது. இதில் மிகவும் முக்கியமான ஒன்று, இரவு உணவை சரியான நேரத்திற்கு சாப்பிடுவது.
உடல் எடை குறைப்பில் இரவு உணவின் பங்கு..
உடல் எடை குறைக்கும் நேரத்தில், உடல் எடையை கட்டுப்படுத்துவது ஆரோக்கியமாக இருக்க தேவையான வாழ்க்கை முறைகளுள் ஒன்றாகும், என்ன சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதும் மிகவும் முக்கியமாகும். ஒரு நபரின் எடையை குறைப்பதில் உணவு நேரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொருவருக்கும், அவர்களின் டின்னருக்கான நேரம் மாறலாம். ஒருவர் 7 மணிக்கு சாப்பிடுவர், இன்னும் சிலர் இரவு 10 மணிக்கு சாப்பிடுவர். இதில், எந்த நேரம்தான் சரியானது?
உங்களுக்கான அட்டவணை:
நீங்கள் 9-5 வேலை பார்ப்பவர் என்றால், தாராளமாக 6 அல்லது 7 மணி அளவில் இரவு உணவினை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் வெவ்வேறு ஷிஃப்ட்களில் வேலை செய்பவர் என்றால், இந்த சமயத்தில் டின்னர் சாப்பிடுவது கடினமாகி விடும். மாலை ஷிஃப்ட்களில் வேலை செய்பவராக இருந்தால், அதற்கு ஏற்றவாறு உங்களின் இரவு உணவுக்கான நேரத்தை நீங்கள் வகுக்க வேண்டியதாக இருக்கும்.
உங்கள் உடல் என்ன சொல்கிறது என்பதை கேளுங்கள்:
உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனிப்பது மிகவும் அவசியமாகும். மாலை பொழுதுகளில் உங்களுக்கு பசி உணர்வு ஏற்பட்டால், அந்த நேரத்தில் இரவு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அர்த்தம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், பசியுடன் இருக்கும் போது சாப்பிடுகையில், அளவுடன் சாப்பிடுவதும் மிகவும் அவசியமாகும். இதனால் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
குடும்பத்தினருடன் சாப்பிடுதல்:
ஒரு சிலர், இரவு ஒரு வேளை உணவை மட்டும் குடும்பத்தினருடன் சாப்பிடுவர். இந்த நேரத்தில்தான் அனைவருடனும் உரையாட முடியும் என்பதால் அனைவரும் வரும் ஒரே நேரத்தில் உணவு பரிமாறப்படும். ஆனால், நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள் என்றால், உங்கள் குடும்பத்தினருக்கு எடுத்து சொல்லி, புரியவைத்து முன்னதாகவே சாப்பிட்டு விடலாம்.
மேலும் படிக்க | சம்மரில் சுர்ருனு கோபம் வருதா... இந்த 6 விஷயங்களை செய்யுங்க் கூல் ஆகிவிடுங்க
உடல்நலனை கருத்தில் கொள்ள வேண்டும்:
நீங்கள் இரவில் எந்த நேரத்தில் உணவு சாப்பிடுகிறீர்கள் என்பதை பொறுத்து உங்களின் ஒட்டுமொத்த உடல் நலனும் அமையும். ஒரு சில ஆய்வுகள், மாலை பொழுதுகளில் சீக்கிரமாக சாப்பிடுவது எளிதில் நீங்கள் சாப்பிட்ட உணவுகளை ஜீரணமாக்க உதவும் என்று கூறுகிறது. உங்களுக்கு உடலில் ஏதேனும் மருத்துவ குறைபாடுகள் இருந்தால், அதை நீங்கள் இரவில் உணவு எடுத்துக்கொள்ளூம் நேரத்தை வைத்து கட்டுப்படுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கென்று சில சுகாதார நிபுணர்கள் இருக்கின்றனர். அவரத்களின் அறிவுருத்துல்களின் படியும் நீங்கள் உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம்.
இதுவும் முக்கியம்..
உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு, டின்னர் சாப்பிடும் நேரம் மட்டுமல்ல என்ன சாப்பிடிகிறோம் என்பதும், என்ன டயட் இருக்கிறோம் என்பதும் முக்கியும். இதன் கூடவே சேர்த்து உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். எனவே, குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு சாப்பிடுவது உடல் எடையை வேகமாக குறைக்க முதல் படி மட்டுமே என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 10 நாட்களில் 5 கிலோ எடையை ஈசியாக குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ