உடல் எடை சட்டென குறைய..தினமும் 5 நிமிடம் ‘இதை’ செய்யுங்கள் போதும்!

5 Minute Yoga Asanas For Weight Loss : உடல் எடையை வேகமாக குறைக்க, பலர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுவர். அப்படி, அனைவருக்கும் எடையை குறைக்க உதவும் ஒரு டிப்ஸை இங்கு பார்ப்பாேம்.   

Written by - Yuvashree | Last Updated : Mar 14, 2024, 06:31 PM IST
  • உடல் எடையை குறைக்க உதவும் யோகாசனங்கள்
  • என்னென்ன ஆசனங்களை செய்ய வேண்டும்?
  • இவற்றை 5 நிமிடங்கள் செய்யலாம்
உடல் எடை சட்டென குறைய..தினமும் 5 நிமிடம் ‘இதை’ செய்யுங்கள் போதும்! title=

5 Minute Yoga Asanas For Weight Loss : உடல் எடை, ஆரோக்கியமற்ற முறையில் ஏற்றுவது மிகவும் எளிது. ஆனால் அதே வேகத்தில், அதை குறைக்க முடியுமா என்று கேட்டால், அது முடியாத காரியம் என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். அப்படி உடனடியாக எடையை குறைக்க வேண்டும் என்றால் சரியான டயட், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். இதனுடன் சேர்த்து, உடலுக்கு நன்மை பயக்கும் யோகாசனத்தையும் செய்ய வேண்டும். தினமும் 5 நிமிடம் யோகாசனம் செய்தால் உடல் எடை குறையும் என கூறப்படுகிறது. 

5 நிமிட யோகாசனம்..

5 நிமிட யோகா பயிற்சி, எடை இழப்பிற்கு உதவும் பழக்கமாக கருதப்படுகிறது. இது குறித்து பேசும் மருத்துவர்கள், ஒரு சில யோகாசனங்கள் மட்டும் உதவும் என கூறுகின்றனர். மேலும், உடனடியாக உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால், அதற்கான நிலையான முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். 

எடை எழப்பிற்கு யோகாசனம் எப்படி உதவுகிறது?

யோகாசனம் செய்யும் போது உடலில் உள்ள பல தசைகள் உதவுமாம். கொழுப்பை குறைப்பதில் இருந்து, உடல் எடையை குறைப்பது வரை பல விஷயங்களுக்கு யோகா பயிற்சி உதவி புரிகின்றது. ஒரு சிலருக்கு மன அழுத்தம் அல்லது மனக்குழப்பம் உள்ளிட்ட காரணங்களினால் இரவில் தூக்கம் வராமல் இருக்கலாம். அந்த பிரச்சனையை சரி செய்வதற்கும், யோகாசனங்கள் உதவுகின்றன. 

5 நிமிடம் செய்யக்கூடிய யோகாசங்கள்..

சூர்ய நமஸ்காரம்:

இந்த ஆசனத்தை, கால்களை நிறுத்தி வைத்த நிலையில் ஆரம்பிக்க வேண்டும். இரு கைகளை தலைக்கு மேல்தூக்கி வைத்து சூரியனுக்கு நேராக நிற்க வேண்டும். நேராக நின்று கண்களை மூடி மூச்சை இழுத்து விட வேண்டும். இதை செய்கையில் நன்றாக ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும். 

மேலும் படிக்க | உடல் எடையை வேகமாக குறைக்க ஆசையா? அப்பாே ‘இந்த’ பருப்பை சாப்பிடுங்கள்..!

Yoga Asanas

அதோ முக்கா ஸ்வானாசனா:

இதனை செய்ய முதலில் நேராக நிற்க வேண்டும். பின்பு மெதுவாக உங்கள் தலை தரையில் படும்படி வைத்து இரு கைகளையும் இரு பக்கமும் நீட்டி அந்த நிலையிலேயே சில மணித்துளிகள் நிற்க வேண்டும். 

ப்ளாகாசனா:

இதை ஆங்கிலத்தில் ப்ளாங்க் என்று கூறுவர். இதை செய்வதற்கு கைகளை தரையில் வைத்து உடல் தரையில் படுக்காமல் கையால் பேலன்ஸ் செய்ய வேண்டும். கால் விரல்கள், கை முட்டியை தவிர வேறு எதுவும் தரையில் படக்கூடாது. இதை ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை இடைவேளை விட்டு செய்யலாம். 

சலபாசனா:

முதலில் தரையில் படுத்துக்கொள்ள வேண்டும். பின்பு தரையில் வயிறு மட்டும் படும்படி படுக்க வேண்டும். வயிறு, தொடை பகுதி தரையில் பட்டால், பரவாயில்லை. கைகளை தரையில் இருந்து எடுத்து கால்களை நீட்ட வேண்டும். இதையும் இடைவேளை விட்டு 5 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இரவில் எப்படி படுத்தாலும் தூக்கம் வரவில்லையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்து பாருங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News