)
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், 2035ஆம் ஆண்டிற்குள், பாதிக்கு பாதி மக்கள்தொகை உடல் பருமனுடன் இருப்பார்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது, உலக மக்கள் தொகையில் 35 சதவிகிதம் பேர் அதிக எடையுடன் இருக்கின்றனராம். உடல் பருமனுடன் இருப்பதால் உடலில் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முன்பு போல இல்லாமல், தற்போது சில நாட்களாக மக்கள் பலருக்கு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அதனால் விதவிதமான டயட், உடற்பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி, நாம் தினசரி ஒரு சில முயற்சிகளை கடைப்பிடித்தால், கண்டிப்பாக 10 நாட்களில் 5 கிலோ எடையை குறைக்கலாமாம். எப்படி தெரியுமா?
10 நாட்களில் உடல் எடையை குறைக்க முடியுமா?
10 நாட்களில் உடல் எடையை குறைப்பது என்பது கொஞ்சம் சவாலான காரியம்தான். ஆனால், அதற்கு ஏற்ற முறையில் முயற்சி செய்தால் கண்டிப்பாக எடையை குறைக்கலாம். இது குறித்து பேசும் மருத்துவ நிபுணர்கள், 10 நாளில் 5-10 கிலோ எடையை குறைக்க, 500 கலோரிகளை டயட் மூலமாகவும், 500 கலோரிகளை உடற்பயிற்சி மற்றும் வீட்டு வைத்தியங்கள் மூலமாகவும் குறைக்கலாம் என கூறுகின்றனர். இதில், பெண்கள் 1200 கலோரிகளையும், ஆண்கள் 1800 கலோரிகளையும் ஒரு நாளைக்கு உட்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.
10 நாட்களில் உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
உணவு முறை:
10 நாட்களில் உடல் எடையை குறைப்பது குறித்து பேசும் மருத்துவர்கள், தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகளில் எதை எதை எடுத்துக்கொள்ள கூடாது என பெரிய லிஸ்டையே கொடுக்கின்றனர். சர்க்கரை சேர்த்த உணவுகள், ஸ்டார்ச் வகை உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டுமாம். மேலும், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டுமாம். அதே போல, அதிகம் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால், அந்த பழக்கத்தை 10 நாட்களுக்கு குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்:
10 நாட்களில் உடல் எடையை குறைக்கும் உணவு பழக்கத்தை பற்றி பேசுகையில், கண்டிப்பாக அதிக கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும் என்கின்றனர், மருத்துவர்கள். இந்த உணவுகளுக்கு பதிலாக புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இத்துடன் சேர்த்து 10 நிமிடங்களுக்கு ஹை இண்டன்சிடி வர்க்-அவுட்டுகள் செய்வதும், 7 மணி நேர தூக்கமும் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எடையை வைத்து எடை போடுதல்..
ஒரு சிலர், தாங்கள் உடல் எடையை குறைக்கும் பயணத்தில் முன்னேறி இருக்கிறோமா என்பதை பார்ப்பதற்காக ஒரு நாளைக்கு 2 முறை வெயிட் செக் செய்வர். இது, நம்மை பல சமயங்களில் கவிழ்த்து விட்டுவிடுமாம். எனவே, வாரத்திற்கு ஒரு முறை எடை போட்டால் போதும் என்கின்றனர், உடற்பயிற்சி நிபுணர்கள்.
ஹெல்தியான டயட்:
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக ஸ்ட்ரிக்ட் டயட் இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி டயட் இருக்கும் போது, நாம் சகஜமாக சாப்பிடும் உணவுகளுக்கு மாற்றாக வேறு ஹெல்தியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு வீட்டில் சமயலுக்கு உபயோகிக்கும் எண்ணெய்க்கு பதிலாக, 10 நாளைக்கு நெய் உபயோகிக்கலாம். இனிப்பாக ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அதற்கு மாற்றாக ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிடலாம் அல்லது பழசாறையும் அருந்தலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ