ஹெட் போன்சை, பலர் பல்வேறு காரணங்களுக்காக உபயோகிக்கின்றனர். படம் பார்க்க, பாடல் கேட்க, புத்தகம் கேட்க, தொலைபேசியில் தொடர்பு கொள்ள என இதற்கு பல்வேறு வகையில் பயன்பாடுகள் உண்டு. சொல்லப்போனால் செல்போன்கள் எப்படி நமக்கு மூன்றாம் கை போல ஆகிவிட்டதோ அதேபோல நம்மில் பலரது வாழ்வில் பெரிய அங்கம் வகிக்கிறது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 19 வயதிலிருந்து 29 வயதில் இருப்பவர்கள் பெரும்பாலும் 5.5 மணி நேரம் முதல் 7.8 மணி நேரம் வரை ஹெட்போன்ஸ் உபயோகிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காது கேட்கும் தன்மை: 


அதிக அளவு சத்தத்தில் ஹெட்போன்ஸ் உபயோகப்படுத்துகையில் நமது மூளை உற்சாகமடையும். இதே சத்தத்தில் தொடர்ந்து பல மணி நேரம் இவ்வாறு ஹெட்ஃபோன்ஸ் மூலம் பாடலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு விஷயத்தை கேட்டுக் கொண்டிருந்தால் அது நமக்கு மந்தமாக காது கேட்கும் தன்மையை அல்லது செவித்திறன் இழக்கும் தன்மையை கூட உண்டாக்கலாம். 


காது இரைச்சல்: 


நம்மில் பலருக்கு அடிக்கடி காதில் இரைச்சல் உணர்வு ஏற்படும். இதற்கு காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக ஹெட்போன்ஸ் அதிகமாக உபயோகப்படுத்துபவர்கள் இதனால் அடிக்கடி பாதிக்கப்படுவர். தொடர்ந்து பல மணி நேரம் இடையில் ஓய்வே இல்லாமல் ஹெட்போன்ஸ் உபயோகப்படுத்தினால் அது காது இரைச்சல் அதிகமாவதற்கு வழி வகுக்கலாம். அதிக சத்தத்தில்  பாடல் கேட்டுக் கொண்டிருந்தால், காதில் ரத்த ஓட்டம் சரியாக இருக்காது என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது காது கேட்கும் தன்மையும் கை விட்டு போகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 


பெருமூளை ரத்தக்குழாய் சிதைவு:


அதிக நேரம் சத்தத்துடன் இருக்கும் ஒரு சூழலில் இருக்கும்போது அது தலைசுற்றல் மற்றும் இன்ன பிற உள்ளூர பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம். இதனால் உடலில் சோர்வுணர்வு ஏற்பட்டு ஆற்றல் அற்ற நிலை உண்டாகலாம். இது, பெரு மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுவதனால் நிகழ்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட நேரம் ஹெட்போன்ஸ் உபயோகிப்பவர்கள் இதனால் அவதிக்குள்ளாகின்றனர். 


மேலும் படிக்க | ஒரு துண்டு வாழை தண்டு போதும்.. மொத்த நோயும் விறுவிறுவென்று ஓடிவிடும்


கவனச்சிதறல்:


ஹெட்போன்ஸ் இருந்து எழும்பும் போலியானது செருப்பறைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் மூளைக்கு செல்லும் நரம்பு மண்டலம் பாதிப்படைகிறதாம். எனவே அதிகப்படியான ஹெட்போன்ஸ் பயன்பாடு கவனம் செலுத்தும் திறனையும் பாதிக்கும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


ஹெட்போன்ஸ் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது எப்படி? 


குறைவான சத்தம்: 


>எந்த விஷயத்தையும் எடுத்தவுடன் முழுமையாக வாழ்வில் இருந்து விலக்குவது என்பது கடினமான காரியம் ஆகும். எனவே முதலில் ஹெட்போன்ஸின் சத்தத்தை குறைவாக வைத்து கேட்க பழக வேண்டும். காதில் இரைச்சல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு ஹெட்ஃபோன்ஸ் பக்கமே தலை வைத்து படுக்க வேண்டாம். 


>வயர் ஹெட்போன்சை விட ப்ளூடூத் ஹெட்போன்களில் சத்தம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அது போன்ற ஹெட்போன்ஸ்களை வாங்கி பயன்படுத்தவும். 


>Noise cancellation இருக்கும் ஹெட்போன்ஸ்களை வாங்கி பயன்படுத்துவதும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | முடி ரொம்பவே குட்டியா இருக்கா? அப்போ இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்துங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ