ஹெட்போன் அதிகம் பயன்படுத்தினால் என்ன ஆகும்? இதை தெரிஞ்சுக்கோங்க...!

ஹெட்போன் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களால் காதுகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது.

 

1 /9

நீங்கள் ஹெட்போன் அதிகம் பயன்படுத்தும் நபராக இருந்தால், தற்போது உங்களுடைய காதுகளில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் வளர்ந்திருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.   

2 /9

தற்போது நாம் வெளியே எங்கு சென்றாலும் கையில் ஸ்மார்ட் போனும், ஹெட்போனும் இல்லாமல் போவதில்லை. இதைப் பயன்படுத்தி பாடல்கள் கேட்பது, வீடியோக்கள், திரைப்படங்கள் பார்ப்பது என பல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறோம்.   

3 /9

பல நிறுவனங்களும் புதிதாக ஹெட்போன்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். மக்களும் ஸ்டைலாக அதை வாங்கி காதில் மாட்டிக்கொண்டு இசை மழையில் நனைகின்றனர். ஆனால் ஹெட் ஃபோனால் நமது காதுகளில் பாக்டீரியாக்கள் உருவாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா?   

4 /9

அதிகபடியாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களின் காதுகளில் பாக்டீரியாக்கள் எளிதாக நுழையும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இதற்கான போதிய விழிப்புணர்வும் அவர்களுக்கு இருப்பதில்லை.   

5 /9

ஹெட்போனில் பணிந்திருக்கும் அதிகப்படியான தூசிகளும், அழுக்குகளும் நம் காதுகளில் தொற்றை ஏற்படுத்த வழி வகுக்கும். எனவே அதை அவ்வப்போது சுத்தம் செய்து பயன்படுத்துவது நல்லது.   

6 /9

காதில் பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்த்தொற்று ஒரு சங்கடமான விஷயம்தான். மேலும் ஹெட்போன் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களாலும் காதுகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது.   

7 /9

பிளாஸ்டிக் மற்றும் தோல் பொருட்களால் செய்யப்பட்ட ஹெட்போனால், காதில் நோய்த்தொற்று அபாயம் அதிகரிக்கிறது. எனவே ஹெட் போனை நீண்ட நேரம் பயன்படுத்துவது சரியல்ல. அப்படியே பயன்படுத்தினாலும் குறைந்த ஒலியில் அதைப் பயன்படுத்த வேண்டும்.   

8 /9

ஹெட்போன்களை அதிகம் பயன்படுத்துவதால், காதில் போதிய காற்றோட்டமின்றி அதிகம் வெப்பமடைகிறது. இது பாக்டீரியாக்கள் வளர்வதற்கு வழி செய்கிறது. எனவே ஹெட்போன் அதிகம் பயன்படுத்துபவர்கள் காதுகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வது நல்லது.   

9 /9

உங்கள் காதுகளை நோய் தொற்றுகளிடமிருந்து பாதுகாக்க ஹெட்போனையும், உங்கள் காதுகளையும் அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ளுங்கள்