ஒரு துண்டு வாழை தண்டு போதும்.. மொத்த நோயும் விறுவிறுவென்று ஓடிவிடும்

Nutritional value of Banana stem : வாழைத்தண்டில் ஊட்டச்சத்து மதிப்பு உள்ளதா? அவை உடலுக்கு என்னென்ன நன்மைகளை தர உதவுகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 10, 2024, 06:26 PM IST
  • வாழைத் தண்டின் நன்மைகள் என்னென்ன?
  • உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.
ஒரு துண்டு வாழை தண்டு போதும்.. மொத்த நோயும் விறுவிறுவென்று ஓடிவிடும் title=

Banana Stem juice benefits : வாழைப்பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அதன் இலைகள் மற்றும் பூக்களிலும் நிறைய நன்மைகளைத் தரும். எனவே இதன் தண்டுகளிலும் ஏதேனும் ஊட்டச்சத்து மதிப்பு உள்ளதா?? அவை உடலுக்கு என்னென்ன நன்மைகளை தருகிறது என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

வாழைத் தண்டின் நன்மைகள் என்னென்ன -  Benefits of Banana Stem?

உடல் எடையை குறைக்க உதவுகிறது | Weight Loss
வாழைத்தண்டில் (Banan Stem Juice Health Benefits) அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது. இந்த ஜூஸை உட்கொள்வதன் மூலம் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். இறுதியில் உங்கள் எடை இழப்பு பயணத்தில் உதவுகிறது.

மலச்சிக்கல் சிகிச்சை | Constipation
வாழைத்தண்டில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமின்றி, அதனுடன் இது வயிற்றுப்போக்கை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. அதிகபட்சமாக நார்ச்சத்து பெற வாழைத்தண்டு சாற்றை வடிகட்டாமல் குடிக்க வேண்டும்.

மேலும் படிக்க | Blood Sugar Control Tips: சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இந்த சூப்பர் மசாலாவை ட்ரை பண்ணுங்க..!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் | Diabetes
வாழைத்தண்டில் இருந்து தயாரிக்கப்படும் சாறு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது, ஏனெனில் அதில் சர்க்கரை கிடையாது. இது தவிர, இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

நச்சுக்களை நீக்க உதவுகிறது | Removes toxins
வாழைத்தண்டு உங்கள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. பல தொற்று நோய்களிலிருந்து உங்களை விடுவிக்க இது மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்.

உங்கள் செரிமானத்திற்கு சிறந்தது | Digestion
வாழைத்தண்டு சாறு குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து உங்கள் செரிமானத்திற்கு ஏற்றது.

சிறுநீரக கல்லை கரைக்கும் | Kidney Stone
வாழைத்தண்டு சாறு சிறுநீரக கற்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கால்சியம் படிகங்கள் அல்லது கால்சியம் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது. அதிகப் பலன்களைப் பெற ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இந்த ஜூஸை பருக்கவும்.

இரத்த சோகையைத் தடுக்கிறது | Anemia
வாழைத்தண்டின் மற்றொரு ஆரோக்கிய நன்மை என்னவென்றால், இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி6 நிறைந்திருப்பதால் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இரத்த சோகை பிரச்சனையை போக்க உதவுகிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது | Blood Pressure
வாழைத்தண்டில் வைட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம் பண்புகள் உள்ளன, இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் சிகிச்சைக்கு உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த விதையை வெறும் வயிற்றில் குடியுங்கள்! அப்புறம் மாற்றத்தை நீங்களே தெரிஞ்சிப்பீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News