வைட்டமின் கே குறைபாடு: உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் ஒன்று வைட்டமின் கே, இது எலும்பு வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், காயங்களைக் குணப்படுத்துவதிலும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும், புற்றுநோயைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைட்டமின் கே என்பது பல்வேறு புரதங்களின் தொகுப்புக்கு உதவும் ஒரு ஊட்டச்சத்து ஆகும். புரோத்ராம்பின் (Prothrombin) என்பது வைட்டமின் கே மூலம் தயாரிக்கப்படும் புரதங்களில் ஒன்றாகும். புரோத்ராம்பின் இரத்தம் உறைதல் மற்றும் ஆரோக்கியமான எலும்பு வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. வைட்டமின் கே, ஆஸ்டியோகால்சின் (Osteocalcin) என்ற மற்றொரு புரதத்தை செயல்படுத்துகிறது, இது எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் இரத்தத்தில் கால்சியம் அளவை ஒழுங்குபடுத்துவதற்கும் முக்கியமானது ஆகும்.


வைட்டமின் கே குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனை (Vitamin K Deficiency) 


உடலில் வைட்டமின் கே குறைபாடு ஏற்பட்டால், பல கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம். இரத்தத்தை உறைய வைக்கும் பணியில் முக்கியமான வைட்டமினாக இருக்கும் கே குறைபாடு ஏற்பட்டால், உடலில் ரத்தம் உறையாது. சிறிய காயம் ஏற்பட்டாலும், ரத்தம் வெளிவரத் தொடங்கினால் அது நிற்காமல் தொடரும், இது பெரிய ஆபத்தாகும்.


மேலும் படிக்க | பாடாய் படுத்கும் வைட்டமின் கே குறைபாடு: அறிகுறிகள், சரி செய்யும் வழிகள் இதோ 


அதுமட்டுமல்ல, வைட்டமின் கே குறைபாடு காரணமாக, மூக்கு, பற்கள், ஈறுகள், சிறுநீர் மற்றும் மலம் ஆகியவற்றிலிருந்து இரத்தப்போக்கு வரத் தொடங்கலாம். அதேபோல வைட்டமின் கே குறைபாட்டால் உடலின் பல பாகங்கள் குழியாகிவிடும். அதோடு எலும்புகள், இதயம், மூளை, கணையம், கல்லீரல் போன்ற உறுப்புகள் சரியாக இயங்காது. 


எனவே, உடலில் வைட்டமின் கே குறையாமல் இருபப்தை உறுதி செய்யவேண்டும். அதற்கு இந்த வைட்டமின் குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் அதன் குறைபாட்டை ஈடுசெய்யும் உணவுகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.


வைட்டமின் கே குறைபாடு அறிகுறிகள்  (Vitamin K Deficiency Symptoms)
சிறிய காயங்களுக்குப் பிறகும் அதிக இரத்தப்போக்கு
அடிக்கடி மூக்கில் இரத்தம் வருவது
ஈறுகள் மற்றும் பற்களில் இரத்தப்போக்கு
காயங்கள் ஆற நீண்ட காலம் எடுப்பது 
மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு 
மூட்டுகள் மற்றும் எலும்புகளில் வலி
நகத்தின் கீழ் இரத்த உறைவு
பற்கள் பலவீனமடைதல்


மேலும் படிக்க |  Gout Health: குளிர்காலத்தில் வேகமெடுக்கும் யூரிக் அமில பிரச்சனைகள்! கட்டுப்படுத்த 5 வழிகள்


வைட்டமின் கே குறைபாட்டைப் போக்க சில உணவுகளை நமது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


வைட்டமின் கே உணவு ஆதாரங்கள்
வைட்டமின் கே குறைபாட்டை போக்க, உங்கள் உணவில் சில உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ்களையும் எடுத்துக் கொள்ளலாம்.


கீரை, கடுகு, ப்ரோக்கோலி, பீன்ஸ், வெந்தயக்கீரை, வெந்தயம், பச்சை இலைக் காய்கறிகள், முட்டைக்கோஸ், முள்ளங்கி, பீட்ரூட், சிவப்பு மிளகாய், முந்திரி, கிவி, மாதுளை, ஆப்பிள், மாதுளை, அவகேடோ, வாழைப்பழம், முளைத்த தானியங்கள், பால், முட்டை, சீஸ் மற்றும் மீன் உட்கொள்ள வேண்டும். 


உடலில் காணப்படும் வைட்டமின் கே குறைபாட்டின் (Vitamin K Deficiency) அறிகுறிகளை தவறுதலாக கூட புறக்கணிக்கவோ அலட்சியப்படுத்தவோ வேண்டாம். அதன் குறைபாட்டை ஈடுசெய்ய, உங்கள் உணவில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். மேலும், அதிக இரத்தப்போக்கு அல்லது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.


(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Rapid Weight Loss: வேகமா தொப்பையை குறைக்கணுமா? கொய்யா சாப்பிடுங்க போதும், ஈசியா குறைக்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ