ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் Covid-19 தொற்று பரவாமல் திறமையாக கட்டுப்படுத்தப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாராவி குடிசை பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை உலகம் எடுத்துக்காட்டாக பின்பற்றி செயல்படலாம் என WHO அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் (Tedros A. Ghebreyesus) தெரிவித்தார்


ALSO READ | தினமும் கொஞ்சம் தேங்காய் போதும்… நெருங்கி வர அஞ்சி நோய்  ஓடும்…. !!!!


 


மிக மிக நெருக்கமான மக்கள் தொகை கொண்ட தாராவி குடிசைப்பகுதியில், மக்களுக்கு திறமையான வகையில் சோதனை நடத்தப்பட்டு, தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு,  விரைவில் தனிமைப்படுத்தப் பட்டனர் என்றும் Corona தொற்று பரவும் சங்கிலி திறமையாக உடைக்கப்பட்டது என்றும் உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குனர் பாராட்டினார்.


இதற்கு நன்றி தெரிவித்த மும்பை மாநகராட்சி, மிஷன் தாராவி (#Mission Dharavi) என்னும் இந்த இயக்கத்தில் மக்களுடன் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியது.


ALSO READ | கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் Itolizumab ஊசி மருந்து பலனளிக்குமா…


 


உலக சுகாதார அமைப்பின் குறித்து கருத்து தெரிவித்த மாநில சுகாதார ராஜேஷ் தோப், முதல் நாளிலிருந்தே தாராவி பகுதியில் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார், மாலேகான், நாசிக் போன்ற இடங்களிலும் இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.


தொற்று பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளில், மக்களுக்கு உள்ள அறிகுறிகளை விரைவில் கண்டறிந்து மக்களை தனிமைப் படுத்தியதுடன், அப்பகுதி முழுவதும் அடிக்கடி சுத்திகரிப்பு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.


தாராவி பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம் எல் ஏவும் கல்வி அமைச்சருமான வர்ஷா கெய்க்வாட், தாராவி மக்கள் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி, நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதாக குறிப்பிட்டார்.


எனினும் உலக சுகாதார அமைப்பு, பல இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுவதை தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மிகவும் எச்சரிக்கை தேவை என்று அறிவுறுத்தியுள்ளது.


மும்பையில் இதுவரை 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்தி 800க்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். மும்பையில் மட்டும் 90 ஆயிரத்து 463 பேர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்  5,100க்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர்.