புதுடெல்லி: நாட்டில் கொரோனா தொற்றால் ஏற்படும் பேரழிவு பதட்டமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி ஒரு மிகப்பெரிய ஆயுதமாகும். ஒருபுறம் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுபுறம், தடுப்பூசி (Vaccine) போட்டுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால், எந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வது நல்லது என்ற கேள்வியும் பலரது மனதிலும் உள்ளது. மூன்றாவது தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி இப்போதுதான் பொது மக்களுக்கு, அதுவும் சில இடங்களில் மட்டுமே கிடைக்கத்துவங்கியுள்ள நிலையில், தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கின்றன.


சமீபத்தில், மேதாந்தா மெடிசிட்டியின் தலைவர் டாக்டர் சுஷீல் கடாரியா, இது குறித்த தனது கருத்தை வெளியிட்டார். மக்களிடம் தடுப்பூசி தொடர்பான எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என அவர் கூறுகிறார். இப்போது தடுப்பூசி போடுவதற்கான நேரமே தவிர, தடுப்பூசியின் பிராண்டை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


டாக்டர் கட்டாரியா என்ன கூறினார்?


யார் கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும், யார் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்த தகவலையும் டாக்டர் கட்டாரியா வழங்கியுள்ளார். மேலும், '18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களும் தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கு முன்னர் தங்கள் உடல நல கூறுகளை மனதில் கொள்ள வேண்டும். இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை உட்கொள்ளும் வயதானவர்கள் கோவாக்சின் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்' என்று அவர் கூறினார்.


ALSO READ: 18+ வயதினருக்கு தடுப்பூசி திட்டம் தொடக்கம்!


டாக்டர் கட்டாரியா கருத்துப்படி, 'கோவிஷீல்ட் முக்கியமாக வயதானவர்களுக்கு அல்லது கடுமையான இணை நோய் உடையவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவை தவிர, சில அறிக்கைகளின்படி, ஒவ்வாமை உள்ளவர்கள், காய்ச்சல் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு அமைப்பு தொடர்பான மருந்துகளை எடுத்துக்கொள்கிறவர்கள் ஆகியோர் கோவாக்சின் செலுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் கூறப்படுகிறது.'


கோவாக்சின் இளைஞர்களுக்கு சரியானது
டாக்டர் கட்டாரியா கூறுகையில், 'ஆக்ஸ்போர்டு-ஏக்ஸ்ட்ராஜெனெகா (Oxford-Astrazeneca jab) தடுப்பூசியைத் தேர்ந்தெடுக்கும் இள வயதினரில், கோவாக்சினை ஒப்பிடும்போது அதிக பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. கோவிஷீல்ட் அதிக நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது என்றும் இதனால், இதில் அதிக பக்கவிளைவுகள் இருப்பதாகவும் பல அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, இளைஞர்கள் கோவாக்சினை செலுத்திக்கொள்வது நல்லது' என்றார்.


பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் கோவாக்சினை தவிர்க்கலாம்


தடுப்பூசியின் நன்மைகளைப் பற்றி பேசிய டாக்டர் கட்டாரியா, 'கோவிஷீல்ட்டின் டோஸ் கோவாக்சினைக் காட்டிலும் உடலுக்குள் அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. ஆகையால், நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்கள், கோவாக்சினைத் (Covaxin) தவிர்த்து கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்' என்று தெரிவித்தார்.


ALSO READ: Big News: CoWIN செயலியில் இனி Sputnik V தடுப்பூசிக்கும் பதிவு செய்யலாம், விலை, பிற விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR