பேரீச்சம் பழத்தில் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் ஈ சத்துக்களும் நிறைந்துள்ளன. குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரீச்சம் பழத்தில் அதிகம் இருக்கின்றன. ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கும் ,பேரீச்சம்பழம் நமது ஆரோக்கியம் (Benefits of dates) சீராக இருப்பதை உறுதி செய்கிறது..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும், கோடைக்காலத்தை விட, குளிர் பருவத்தில் பேரீச்சம்பழத்தை உண்பது மிகவும் நல்லது. அதற்கு காரணம், சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம் பேரீச்சம்பழம் என்பது தான். பழமாக இருக்கும்போது பேரீச்சையில் இருக்கும்  இரும்புச்சத்து, கல்சியம், மாங்கனீசு, தாமிரம், மெக்னீசியம், விட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் விட்டமின் இ சத்துக்கள், துளியும் குறையாமல் உலர் பேரிட்சையிலும் கிடைக்கிறது.


பேரீச்சம்பழம் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் சுவைகளுடன் 200 க்கும் வகைகளில் கிடைத்தாலும் அனைத்துமே ஊட்டச்சத்தில் ஒரே மாதிரியானவை என்பதால், அதன் நிறம் மற்றும் தோற்றத்தை கவனிக்க வேண்டாம்.


மேலும் படிக்க | வைட்டமின் பி12 குறைபாடு: இவைதான் அறிகுறிகள்... இந்த உணவுகளின் மூலம் சுலபமாய் சரி செய்யலாம்


குளிர்காலத்தில் பேரீட்சை உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.


இரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை


பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப்பழம், குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது. பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதனால் உடல் சூடாக இருப்பதுடன், உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகள் நீங்கும்.  


உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது 
குளிர்காலத்தில் குறைந்த வெப்பநிலை காரணமாக, இரத்த நாளங்கள் தற்காலிகமாக சுருங்கும். இதனால் உடலுக்கு ரத்தம் சரியாக வழங்கப்படுவதில்லை. அத்தகைய சூழ்நிலையில் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுங்கள். ஏனெனில் பேரீச்சம்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.


மேலும் படிக்க | சுலபமா தொப்பை கொழுப்பை குறைக்க சுரைக்காய் போதும்: இப்படி சாப்பிடுங்க... எடை குறையும்


சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படுகிறது


சிலருக்கு குளிர்காலத்தில் இனிப்புகள் மீது விருப்பம் அதிகமாக உண்டாகும். நீரிழிவு நோயாளிகள் இனிப்பு வகைகளை விரும்பி சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஆனால் பேரீச்சம்பழத்தை நீரிழிவு நோயாளிகள் தினமும் சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. நீரிழிவு நோயாளிகளுக்கு பேரிச்சம்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், இதில் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளது.


சளி மற்றும் இருமலில் இருந்து பாதுகாப்பு  
குளிர் காலத்தில் பேரீச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலோ, அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிட்டாலோ, சளி, இருமல் பிரச்சனையும் நீங்கும். இந்த பருவத்தில், பெரும்பாலான மக்கள் சளி மற்றும் இருமலுக்கு இரையாகின்றனர். இந்த அனைத்து அறிகுறிகளையும் நீக்குவதில் பேரீச்சம்பழம் இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவிகளுடன் எழுதப்பட்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | யூரிக் அமில பிரச்சனையா... டயட்டில் சேர்க்க வேண்டிய ‘சில’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ