குளிர் கால பராமரிப்பு முறைகள்!!
குளிர் காலத்தில் சருமம், முடி போன்றவை வெகுவாக பாதிக்கப்படுகின்றன. குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
குளிர் காலத்தில் சருமம், முடி போன்றவை வெகுவாக பாதிக்கப்படுகின்றன. குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும். வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படையும்.
உதடு வெடிப்பிற்கான எண்ணெய் அல்லது வெண்ணையை உதட்டில் தடவ லம். அதனால், வெடிப்பு குணமாவதுடன், உதட்டுக்கு கூடுதல் மென்மை கிடைக்கும்.
இரவு உணவுக்கு பின் ஒரு டம்ளர் சுடுநீரில் சிறிதளவு தேன், 6,7 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள், குளிர் காலத்தில் காலையில் வரும் வறட்டு இருமல்,சளி குணமாகும்.
வாக்கிங் போகிறவர்கள் காலை தவிர்த்து மாலையில் போவது நல்லது
குளிர் காலத்தில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும், எனவே கடின மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து, எளிய சைவ உணவுகளையே எடுத்து கொள்ளுங்கள்.