புதுடெல்லி: ரத்தசோகையை போக்கும் ராகிக்களின் அற்புதமான சத்தின் ரகசியம் இதுதான்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும்; ரத்தச்சோகை வராமல் தடுக்கும். எனவே, இது ரத்தசோகை, உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து. ராகி உடல்சூட்டைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று.


தமிழகத்தில் ”ராகி களி” என அழைக்கப்படும் ஆரோக்கியமான உணவு, கர்நாடக மாநில கிராமப்புறங்களில் முக்கிய உணவாக உள்ளது. இக்களியில் சேர்க்கப்படும் பொருள்கள் இடத்துக்கிடம் சற்று மாறுபடும்.


ராகி அல்லது கேழ்வரகுக் களி என்பது நன்கு அரைத்த கேழ்வரகு மாவை கொதிநீரில் இட்டு கிளறி உருண்டையாக வார்த்துச் செய்யப்படும் உணவு வகையாகும். 


சிறுதானியங்களில் முக்கியமான ஒன்று ராகி. கேழ்வரகு, ஆரியம், கேப்பை எனவும் பல பெயர்களால் அழைக்கப்படும் ராகியின் சத்துக்களோ அபாரம், விலையோ மிகவும் குறைவு. ஆரோக்கியக் குறைபாடுகளை தள்ளுபடி செய்ய வேண்டுமானால், ராகியை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.


மேலும் படிக்க | சிறுதானியங்களின் முடிசூடா மன்னன் கம்பு, நோய்களுக்கு இது தரும் வம்பு


ராகி எனும் கேழ்வரகு சிறு தானியங்களில் முதன்மை பெற்றிருக்கிற ராகி களியில் இருக்கும் அதிக அளவில் கால்சியம், எலும்பு மற்றும் பற்களை வலுவாக்கும். உடல் சூட்டைத் தணித்து உடலின் வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ராகியில் அதிக அளவில் புரதச்சத்துக்களும் கனிமச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. 


எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமான ராகியில் உள்ள அமினோ அமிலங்கள், ட்ரிப்ஃபன் மற்றும் அடிக்கடி பசி எடுப்பதைத் தடுக்கும். அதேபோல, சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இருக்கின்றவர்களுக்கு ராகி மிகவும் நல்லது. 


ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ராகிக் களி, க ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கச் செய்யும். 



உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கும் ராகியில் உள்ள அமினோ ஆசிடுகள், கல்லீரலில் தங்கியுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலையும் கரைத்துவிடும். 


கடுமையாக வேலை பார்ப்பவர்களும், நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்களும் ராகிக் களியை அதிகம் சாப்பிட்டு வந்தால், மன அழுத்தத்திலிருந்தும் விடுபடலாம். 


ராகியை களியாக செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தைராய்டு பிரச்சினை இருக்கின்றவர்களுக்கு ராகி மிக நல்லது. குறிப்பாக, ஹைப்போ தைராய்டு இருக்கின்றவர்கள் இந்த ராகியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டை சரிசெய்யும்.


மாமியார் வீட்டில் களி தின்னு என்பதன் உண்மையான அர்த்தம் ஆக்கபூர்வமானது மருமகன்களே! சத்தான ராகிக் களியின் அற்புதம்...


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க உதவும் ராகி


 


ராகி களி செய்யும் முறை
தேவையான பொருட்கள்: ராகி மாவு - 100 கிராம், அரிசி நொய் - 50 கிராம், தண்ணீர் - 250 கிராம், உப்பு - தேவையான அளவு.


செய்முறை
சற்று கனமான பாத்திரத்தில் நீரை ஊற்றி சூடேற்றி அதில் அரிசிநொய் இட்டு சிறிது வேக விடவேண்டும். அது நன்றாக வெந்ததும், ராகி எனப்படும் கேழ்வரகு மாவைக் இடவும். நீர் கொதி வந்தபின் பாத்திரத்தை மூடி மிதமான தீயில் வேகவைக்க வேண்டும். 


நன்கு வெந்தவுடன  கரண்டியால் கட்டடியில்லாமல் கிளரவேண்டும். பாத்திரத்தில் வெந்துக் கொண்டிருக்கும் மாவு ஒட்டாத பதத்திற்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். 


களி, ஓரளவு ஆறிய பிறகு, அதை உருண்டைகளாக உருட்டி தண்ணீர் உள்ள பாத்திரத்தில் வைக்கவும். கையில் சூடு அதிகம் பாதிக்காமல் இருக்கவும், களி நன்கு உருண்டு வர வேண்டும் என்பதற்காக, கையில் அவ்வப்போது தண்ணீரால் நனைத்துக் கொண்டு உருண்டை பிடிக்கவும்.


மோர், குழம்பு, தயிர் என எந்த ஒரு காம்பினேஷனில் சாப்பிட்டாலும் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும் ராகிக் களி தயார்...


மேலும் படிக்க | ராகியில் இருக்கும் சிறப்பு நன்மைகள்


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR