Benefits of Ragi: ராகியில் இருக்கும் சிறப்பு நன்மைகள்

சிறுதானியங்களில் முக்கியமான ஒன்று ராகி. கேழ்வரகு, ஆரியம், கேப்பை என்று பல பெயர்களால் அழைக்கப்படும் ராகியின் சத்துக்கள் ஏராளம். ராகியில் உள்ள சத்துக்களைக் கேட்டால், இனிமேல் ராகி உங்கள் தினசரி உணவில் இடம் பிடித்துவிடும். எனவே இந்த போட்டோ தொகுப்பில் ராகியின் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
1 /5

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் : இதில் பாலிஃபினோல்ஸ் (Polyphenols) மற்றும் ஃபைபர் (Fiber) அதிகம். நிரிழிவு நோய் உள்ளவர்கள் கேழ்வரகு தினமும் உண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

2 /5

மினரல்கள் அதிகம் : பொட்டாசியம் (Potassium), பாஸ்பரஸ் (Phosphorus), இரும்பு (Iron) போன்ற மினரல் சத்துகள் அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் ஹீமோகுளோபின் (Hemoglobin) சுரத்தல் அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

3 /5

எலும்புகளுக்கு உறுதி அளிக்கும் : இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் நம் உடலில் உள்ள எலும்புகளை ஸ்ட்ராங் ஆக வைக்கும். இதனால் மூட்டு வலி, முட்டி வலி, எலும்பு முறிவு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.

4 /5

உடலுக்கு ஓய்வு தரும் : ராகியை உண்பதால் உடல் ஓய்வு நிலையை அடையும். இதில் இருக்கும் அமினோ ஆசிடால் மன அழுத்தம், தலைவலி, இன்சோம்னியா போன்ற நோய்கள் குணமாகும்.

5 /5

கொழுப்புகளைக் கரைக்கும் : இதில் நிறைந்திருக்கும் நார் சத்து மற்றும் அமினோ ஆசிட் த்ரியோனைன் கல்லீரல் வெளியிடும் கொழுப்பை கரைத்து சுத்திகரிக்க உதவுகிறது.