Osteoporosis: எலும்பு மெலிதல் நோயிலிருந்து தப்பிக்க கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்
பெண்களுக்கு எலும்புகள் விரைவாக பலவீனமடைய தொடங்குவதால், எலும்பு வலி, எலும்பு முறிவு மற்றும் எலும்பு சிதைவு ஆகியவற்றுக்கு ஆளாக அதிக வாய்ப்புள்ளது.
World Osteoporosis day 2021: பெண்களுக்கு எலும்புகள் விரைவாக பலவீனமடைய தொடங்குவதால், எலும்பு வலி, எலும்பு முறிவு மற்றும் எலும்பு சிதைவு ஆகியவற்றுக்கு ஆளாக அதிக வாய்ப்புள்ளது. பொதுவாக, பெண்களுக்கு எலும்புகள் பலவீனமடையும் என்ற பயம் 30 வயதிற்குப் பிறகு தொடங்குகிறது. ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு (சராசரியாக 45 வயதிற்குப் பிறகு), அது அதிகமாகிறது. அதனால்தான் பெண்களுக்கு சில விஷயங்களை கடைபிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனை மாதவிடாய் நின்ற பெண்கள் அல்லது இளம் பெண்கள் பின்பற்றி, எலும்புகள் பலவீனமடையும் அபாயத்தைக் குறைக்கலாம்.
உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம் 2021 ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில், ஆஸ்டியோபோரோசிஸ் அதாவது எலும்புகள் பலவீனமடைவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!
எலும்புகள் பலவீனமடைந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் நோய் உண்டாகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் என்பது கால்சியம் சத்தில்லாமல், எலும்புகள் தேய்ந்து, நொறுங்கி, எலும்பு முறிவு ஏற்படுத்துவது என்பதே. குறிப்பாக, 35 வயதுக்கும் மேல் பெண்களுக்கு எலும்பு தேய ஆரம்பிக்கும். இந்த நிலை வயதான ஆன், பெண் அனைவருக்கும் ஏற்படும் என்றாலும், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் குறைபாடு காரணமாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிகம் தாக்குகிறது.
ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!
எனவே, மாதவிடாய் நின்ற காலத்தில் வைட்டமின் டி, கால்சியம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை இதிலிருந்து தப்பிக்க உதவுகிறது. டாக்டர் சஞ்சய் குப்தா கூறுகையில், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்களின் போது, எலும்புகள் வலுவிழப்பதைத் தடுக்க போதுமான அளவு கால்சியம் கிடைப்பது மிகவும் முக்கியம். எனவே, சீஸ், தயிர், கீரை, ப்ரோக்கோலி, உலர்ந்த பழங்கள், கொட்டை வகைகள் (குறிப்பாக அக்ரூட் பருப்புகள், பாதாம், உலர் அத்தி போன்றவை) உணவில் உட்கொள்ள வேண்டும். இதனுடன், போதுமான அளவு சூரிய ஒளி உடலில் படுவது மிகவும் முக்கியம். இதனால் வைட்டமின் டி கிடைக்கும். விட்டமின் டி சத்து இருந்தால் தான், உடல் கால்ஷியம் சத்தை கிரகித்துக் கொள்ளும். அதே நேரத்தில், காபி மற்றும் மது அருந்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும், உணவில் பழங்கள், காய்கறிகள், ஒமேகா -3 நிறைந்த மீன், முழு தானியங்கள் போன்றவை மிகவும் நன்மை பயக்கும். இதனுடன், எலும்புகளை வலிமையாக்க தேவையான வைட்டமின் டி அடங்கிய காட் லிவர் ஆயில், போன்றவையும் எடுத்துக் கொள்ளலாம்.
ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!
எலும்புகளை வலுவாக வைக்க நீங்கள் சரியான நிலையில் உட்காருவதும் ஆகும். உட்கார்ந்திருக்கும்போது இடுப்பை நேராக வைத்து, தொப்புளை உள்நோக்கி வைத்து, தோள்களை தளர்வான நிலையில் உட்கார வேண்டும்.
அதோடு, எலும்புகளை வலுவாக வைத்திருக்க, வாரத்திற்கு 3 நாட்கள் சுமார் 45-60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆனால் உங்கள் எலும்புகளையும் தசைகளையும் வலுவாக வைக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும் மிதமான உடற்பயிற்சியும் போதுமானது.
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR