மருத்துவ சாதனை: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 5 வயது குழந்தைக்கு விழிப்பு நிலையில் மூளை அறுவை சிகிச்சை செய்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஐந்து வயது குழந்தைக்கு மூளைக் கட்டிக்காக விழித்தெழுந்த கிரானியோட்டமி மூலம் அறுவைசிகிச்சை செய்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சாதனை செய்திருக்கிறது. இந்த அறுவைச்சிகிச்சை, மிகவும் சிறிய குழந்தைக்கு செய்யப்பட்ட அறுவைசிகிச்சை என்ற சாதனையை படைத்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மருத்துவத்துறை சாதனையில், ஐந்து வயது சிறுமிக்கு, இடது பெரிசில்வியன் இன்ட்ராஆக்சியல் மூளைக் கட்டியை அகற்றுவதற்காக  கான்சியஸ் செடேஷன் நுட்பத்தைப் (Conscious Sedation technique) பயன்படுத்தி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ’விழித்திருக்கும் கிரானியோட்டமி’(awake craniotomy) அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.   இது குழந்தை நரம்பியல் அறுவை சிகிச்சையில் ஒரு அற்புதமான சாதனையைக் குறிக்கிறது என்று ANI செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.


மூளை அறுவைசிகிச்சை செய்துக் கொண்ட சிறுமி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், ’ விழித்திருக்கும் கிரானியோட்டமி’ அறுவைசிகிச்சையின்போது, நம்ப முடியாத அளவு ஒத்துழைப்புக் கொடுத்ததாக மருத்துவர்கள் பாராட்டுகின்றனர். 


மேலும் படிக்க | Delhi Revenue: ஆம் ஆத்மி கட்சிக்கு ஆப்பு வைத்த மதுபான விற்பனை! இப்போது ஆதாயமாக மாறுகிறது


குழுப்பணி மற்றும் ஆதரவு
அறுவை சிகிச்சையின் வெற்றிக்கு டெல்லி எய்ம்ஸில் உள்ள நியூரோஅனெஸ்தீசியா மற்றும் நியூரோராடியாலஜி குழுக்களின் சிறந்த ஒத்துழைப்பே காரணம் என்று அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.


மருத்துவத் துறையின் ஒருங்கிணைந்த முயற்சிகள் உயர்தர செயல்பாட்டு MRI மூளை ஆய்வுகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்தது, விழித்திருக்கும் கிரானியோட்டமி சிகிச்சையின்போது துல்லியத்தன்மை மிகவும் அவசியமானது.


செயல்பாட்டு MRI மூளை ஆய்வுகள் (functional MRI brain studies) அறுவை சிகிச்சை செயல்பாட்டில் முக்கிய பங்கு வகித்தன. இந்த அறுவைசிகிச்சை உலக அளவில் மிகவும் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.  கார்டிகல் பகுதிகள் தொடர்பான முக்கியமான பதிவுகளை இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பாராட்டுகின்றனர்.  


சேதத்தைத் தடுக்கவும், மூளையின் அத்தியாவசிய செயல்பாடுகளைப் பாதுகாக்கவும் கட்டி அகற்றும் போது இந்தப் பகுதிகளைப் பாதுகாப்பது மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.


விழித்திருக்கும் கிரானியோட்டமி அறுவை சிகிச்சை நுட்பம் 
விழித்திருக்கும் கிரானியோட்டமி, ஒரு அதிநவீன நரம்பியல் அறுவை சிகிச்சை நுட்பம் ஆகும், நோயாளி சுயநினைவுடன் இருக்கும் போது மூளைக் கட்டிகளை அகற்றும் சிகிச்சை இது. அறுவைசிகிச்சையின்போது, நிகழ்நேர கார்டிகல் மேப்பிங்கை செயல்படுத்துவதன் மூலம் முக்கிய மூளை செயல்பாடுகளுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


மேலும் படிக்க | பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் ’இந்த’ விஷயத்தில கவனமா இருந்தா, நோய்கள் ’அன்பிரண்ட்’ ஆயிடும்


மூளையின் இயக்கங்கள், பேச்சு அல்லது பார்வையைக் கட்டுப்படுத்தும் பகுதிகளுக்கு அருகில், வலிப்புத்தாக்கத்தை ஏற்படுத்தும் மூளையின் கட்டி அல்லது பகுதி இருந்தால், அறுவை சிகிச்சையின் போது நோயாளி விழித்திருக்க வேண்டும். அறுவைசிகிச்சை செய்யும் அறுவை சிகிச்சை நிபுணர் கேள்விகளைக் கேட்டு, அதற்கு நோயாளி பதிலளிக்கும்போது மூளையின் செயல்பாடு கவனிக்கப்படும், அது பதிவு செய்யப்படும்.  


அறுவைசிகிச்சை தேவைப்படும் உங்கள் மூளையின் சரியான பகுதிக்கு சிகிச்சை அளிக்க நோயாளியிடன் பேசும் போது கிடைக்கும் சமிக்ஞைகள் அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு உதவுகிறது. கூடுதலாக, இந்த அறுவைசிக்க்சை செயல்முறையின் போது இயக்கம், பேச்சு அல்லது பார்வையை பாதிக்கக்கூடிய மூளையின் செயல்பாட்டு பகுதிகளுக்கு சேதம் ஏற்படும் அபாயமும் குறைகிறது.


விழித்திருக்கும் மூளை அறுவை சிகிச்சையின் போது நோயாளி விழிப்புடன் இருக்கிறார். இது அறுவை சிகிச்சையின் இலக்கைப் பற்றிய முக்கிய தகவல்களை அறுவை சிகிச்சை நிபுணருக்குச் சேகரிக்க உதவுகிறது. வலி ஏற்படாமல் இருக்க, மரத்து போவதற்கான மயக்க மருந்து கொடுக்கப்பட்டு இந்த அறுவைசிகிச்சை செய்யப்படும்.  


மேலும் படிக்க | NPS: இரட்டிப்பு லாபம் அளிக்கும் திட்டம்.... ஓய்வூதியத்துடன் பம்பர் வருமானமும் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ