பல் ஆரோக்கியம்: ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழமொழியாக இருந்தாலும், ஆரோக்கியமான உறுதியான பற்களைப் பெற்றிருக்க இன்று பல் துலக்குவது மட்டுமே போதுமானது அல்ல. ஆனால், தினந்தோறும் இருமுறை பற்களை துலக்குவதால் மட்டுமே, பற்கள் என்றென்றும் ஆரோக்கியமாக இருந்துவிடும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், பற்களை ஆரோக்கியமாக பாதுகாக்காவிட்டால், பல்வேறு நோய்கள் நம்மைபாதிக்கும். பற்களை பாதுகாப்பதில் வைட்டமின்களின் பங்கு மிக அதிகமான ஒன்று.
பற்கள் ஆரோக்கியமாக இருக்கவும், எனாமலை (Enamel) தகவமைத்துக் கொள்ளவும் ஊட்டச்சத்துகள் அவசியம். போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்காவிட்டால் பற்களின் ஆரோக்கியம் கெடுவது மட்டுமல்ல, பல்வேறு நோய்களும் நமது உடலை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பற்களின் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சர்க்கரை மட்டுமல்ல. போதுமான அளவில் ஊட்டச்சத்துகள் கிடைக்காததும் தான் என்பது பலருக்குத் தெரிவதில்லை. பற்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், எந்தெந்த நோய்கள் உங்களை பாதிக்கும் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.
நீரிழிவு ஆபத்து
பல் சொத்தை அல்லது பல் சிதைவு என்பது பல நீரிழிவு நோயாளிகளை பாதிக்கும் ஒரு பொதுவான நாள்பட்ட நிலை. நீரிழிவு நோயாளிகள் பற்களை முறையாக பராமரிக்காவிட்டால், பல்லில் இருந்து தொற்று தாடை எலும்புக்கு பரவும். அதிலும் அதிக சீழ் இருந்ததால் சுவாசப் பிரச்சனைகளும் ஏற்படும்.
மேலும் படிக்க | எளிய முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி? ‘இந்த’ 5 பழங்களை சாப்பிட்டு பாருங்கள்!
டிமென்ஷியா ஆபத்து
மோசமான வாய் ஆரோக்கியம் மூளையை பாதிக்கும். வீக்கமடைந்த ஈறுகளில் இருந்து வெளியாகும் பொருட்கள் மூளை செல்களைக் கொன்று நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுக்கும். டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்களும், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் நரம்பு வழிகளில் பரவும் போது அல்லது இரத்த ஓட்டத்தில் நுழையும் போது ஈறு அழற்சியின் விளைவாகவும் ஏற்படலாம்.
கார்டியோவாஸ்குலர் ஆபத்து
மோசமான வாய் ஆரோக்கியம், வாயிலுள்ள பாக்டீரியாக்களை இரத்த ஓட்டத்தின் மூலம் தமனிகளுக்குக் கொண்டு செல்லும். இதனால் இரத்த ஓட்டத்தில் பிரச்சினைகள் மற்றும் இதய அடைப்புகள் ஏற்படலாம். தமனிகள் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் சேதம் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
சிறுநீரக நோய்
நாள்பட்ட சிறுநீரக நோய், சிறுநீரகம், இதயம், எலும்புகள் மற்றும் இரத்த அழுத்தத்தை பாதிக்கும் ஒரு தீவிர உடல்நலப் பிரச்சனையாகும். பெரிடோன்டல் நோய் போன்ற உடலில் ஏற்படும் தொற்றுகள் சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும். ஈறு நோய் உள்ளவர்கள் பொதுவாக பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளனர். சிறுநீரக செயலிழப்பு அல்லது இருதய நோய்க்கு வழிவகுத்தால் சிறுநீரக நோய் ஆபத்தானது.
ஆரோக்கியமான பல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள்
ஆரோக்கியமான பற்களை பெற முக்கியமான நான்கு வைட்டமின்கள் அவசியம், அந்த வைட்டமின்கள் அடங்கியுள்ள சில முக்கிய உணவுப் பொருட்களின் பட்டியல்.
வைட்டமின் ஏ சத்துக்களைக் கொண்ட ஈரல், மீன், பால் மற்றும் முட்டைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்து, மீன், காளான், பால் போன்ற பொருட்களிலும்,சூரிய ஒளியிலும் இருக்கிறது. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி மிகவும் தரமானது.
அத்துடன், மிருதுவான பாலாடைக்கட்டி, முட்டை, வெண்ணெய், ஈரலில் வைட்டமின் K2 நிறைந்துள்ளது. அப்புறம், வைட்டமின் E : கீரை, பிரக்கோலி மற்றும் கொட்டைகள் (Nuts)
சரி விகித அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான பற்களை மட்டுமல்லாது பளபளப்பான சருமத்தையும் பெறமுடியும்
(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ