ஆரோக்கியம்: புகைபிடித்தல் (Smoking) நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது இரகசியமல்ல. இதயம், ரத்தக்குழாய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கான ஆபத்தை இது அதிகரிக்கிறது என்பதை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கிறார்கள். இருப்பினும், சிகரெட்டுகளில் உள்ள நச்சானது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் கருவுறுதலை பாதிக்கும் என்பதை உணரவில்லை. இதனால் விறைப்பை நீட்டிக்க இயலாமை மற்றும் கருவுறுதல் கால பிரச்சினைகளையும் எதிர்கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புகைப்பிடித்தல் (World Tobacco Day) காரணமாக 13 சதவிகித தம்பதிகளுக்கு கருவுறுதல் சிக்கல் ஏற்படுவதாக ஆய்வு ஒன்று கூறுகின்றது. புகைபிடிக்கும் பழக்கம் ஆண்களையும் பெண்களையும் வெவ்வெறு விதமாக பாதிக்கின்றது. இது கருவுறுதல் தொடர்பான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு சிகரெட்டுகள் புகைப்பது அவர்களின் கருத்தரிக்கும் திறனை பாதிக்கும்.


இது குழந்தைக்கு முன்கூட்டியே பாதிப்பை ஏற்படுத்துவதால், கருத்தரிப்பதற்கு முன்னதாகவே புகைபிடிப்பதை (Tobacco) விட்டுவிடுவது நல்லது. ஒரு கணக்கெடுப்பின்படி, குழந்தை பிறக்கும் வயதிற்குட்பட்ட பெண்களில் சுமார் 30% பெண்கள் புகைபிடிப்பதால் கருச்சிதைவு அபாயம் இருக்கும் என்பதையும் 10% பேர் அவர்களின் கருவுறுதலையும் பாதிக்கக்கூடும் என்பதை அறிந்திருக்கிறார்கள். 


மேலும் செய்தி படிக்கவும்: எச்சரிக்கை! பொது இடங்களில் எச்சில் துப்பினால் 1000 ரூபாய் வரையில் அபராதம்...


ஒரு நாளைக்கு புகைபிடிக்கும் ஒவ்வொரு சிகரெட்டிற்கும், எந்தவொரு தம்பதியினருக்கும் கர்ப்பம் தரிக்க அதிக நேரம் எடுக்கும். உண்மை என்னவென்றால், ஒரு பெண் ஒரு நாளைக்கு நான்கு சிகரெட்டுகளை புகைப்பதால் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு புகைபிடிக்கும் ஒரு பெண்ணை விட கர்ப்பமாவதற்கு  இருக்க அதிக நேரம் எடுக்கும்.


புகைபிடிக்கும் (Smoking) பெண்களுக்கு  கருவுறுதல் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சினைகள்


1. ஃபலோபியன் குழாய்களில் உள்ள சிக்கலானது, கருவுறுதல் அடைப்புகள் உட்பட எக்டோபிக் கர்ப்பத்திற்கான சிக்கல்கள்  உள்ளன.


2. கருப்பை உருவாகும்போது இது முட்டைகளுக்கு சேதங்களை ஏற்படுத்தும். 


மேலும் செய்தி படிக்கவும்: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு எளிய வழி...


3. வளரும் கருவுடன் கருச்சிதைவு அதிகரிக்கும் அபாயம். இது உடெரின் லைனிங்கில்  சாதகமற்ற மாற்றங்களுக்கும் வழிவகுக்கும், இது ஆரோக்கியமான கரு உருவாவதற்கு இடையூறாக இருக்கும். 


4. இது கர்ப்பப்பை மாற்றங்களை ஏற்படுத்தும்; குறிப்பாக செர்விக்கல் புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து அதிகரித்துள்ளது. 


5. கருப்பை இருப்பு குறைந்து வருவதைத் தவிர, மேற்கூறிய பிரச்சினைகள் அனைத்தும் நேரடியாக புகைப்பழக்கத்தால் ஏற்படுவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம், இருப்பினும், புகைபிடித்தல் நிச்சயமாக அதை மோசமாக்குகிறது. மேலும், இப்போது கருவுறுதலுக்கான சிக்கல்களுடன், இது எதிர்காலத்தில் கருவுறுதலை குறைப்பதற்கும் வழிவகுக்கும். ஆண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் புதிய விந்தணுக்களை உருவாக்க முடியும், அதேசமயம் பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் எல்லா முட்டையுடனும் பிறக்கிறார்கள்.


மேலும் செய்தி படிக்கவும்: இ-சிகரெட் பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு நோய்வரும் அபாயம்...


எனவே, அந்த முட்டைகள் சேதமடைந்தவுடன், அதை சரி செய்ய  எதுவும் செய்ய முடியாது. புகைபிடித்தல் ஒரு பெண்ணின் கருப்பையில் உள்ள மொத்த முட்டைகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கக்கூடும், மேலும் கருப்பைக்கு முன்கூட்டியே வயதாகலாம். சிகரெட்டுகளில் உள்ள நச்சுகள் டி.என்.ஏ சேதத்திற்கும், பொதுவாக முட்டைகள் முதிர்ச்சியடையும் கருப்பை நுண்ணறைகளின் சேதத்திற்கும் வழிவகுக்கும். 


கருப்பை முன்கூட்டிய வயதாவது  மற்றும் முட்டைகள் குறைவது பெண்களிடையே வெகுசீக்கிரமே  மாதவிடாய் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும், இது வழக்கத்தை விட நான்கு ஆண்டுகள் முன்னதாகவே இருக்கும்.


புகைபிடித்தல் ஆணையும் சமமாக பாதிக்கிறது. விந்தணு ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஐரோப்பிய யூராலஜியின்  மெட்டா பகுப்பாய்வின் படி, புகைபிடித்தல் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல், விந்தணுக்களின் இயக்கம் குறைதல், விந்தணு செறிவு, விந்து டி.என்.ஏ மற்றும் மோசமான விந்து உருவவியல் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதைக் சுட்டிக்காட்டுகின்றது.


மிக முக்கியமாக, புகைபிடித்தல் விந்தணுக்களின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவு மலட்டுத்தன்மையுள்ள ஆண்களுக்கு வீரியமாகவும், அதிக புகைப்பிடிப்பவர்களுக்கு மிதமானதாகவும் இருந்தது. ஆண்கள் புகைபிடித்தல் என்பது IVF வெற்றி விகிதங்கள் மற்றும் கருச்சிதைவு விகிதங்களை அதிகரிப்பதோடு தொடர்பு கொண்டுள்ளது மறைமுக புகையால் துணைவியும் பாதிக்கப்படுகின்றார். கருவுறுதலுக்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, அவர் புகைக்கும் ஒவ்வொரு முறையும், அது அவரது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை குறைப்பது மட்டுமல்லாமல்,  கருவுறுதலையும் குறைக்கிறது.


மேலும் செய்தி படிக்கவும்: லாக்-டவுன் 5, அன்லாக்-1: தமிழகத்தில் எதற்கு அனுமதி, எதற்கு இல்லை -முழு விவரங்கள்


மலட்டுத்தன்மையற்ற புகைப்பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது, மலட்டுத்தன்மையற்ற புகைப்பிடிப்பவர்களில் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு நாளைக்கு 20 அல்லது அதற்கு மேற்பட்ட சிகரெட்டுகள் புகைபிடிக்கும் பழக்கமுள்ள புகைப்பிடிப்பவர்களின் விந்துகளில் அதிக அளவு காட்மியம் இருக்க வாய்ப்புள்ளது. 


இது விறைப்புத்தன்மை அதிகரிக்கும் அபாயத்துடன் நேரடியாக தொடர்புடையது, சில சமீபத்திய ஆய்வுகள் ஆண் புகைப்பிடிப்பவர்களுக்கு மூன்று மடங்கு ஆபத்து அதிகரிப்பதைக் காட்டுகின்றன. விறைப்புத்தன்மை கருவுறாமைக்கு சமமானதல்ல என்றாலும். இருப்பினும், பாலியல் செயல்திறனில் சிரமத்துடன், கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் முக்கியமானதாக இருக்கும். எனவே, புகைபிடிப்பதை விட்டுவிடுவது பாலியல் செயல்திறனுடனும்  கருவுறுதலுடனும் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது.


(தமிழ் மொழிபெயர்ப்பு: ஆ. நிவாஸ்)