புது டெல்லி: உலக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பல விஷயங்களை நாம் அன்றாட வாழ்க்கையில் செய்து வருகிறோம். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகளை நீங்கள் சரியாகத்தான் பின்பற்றுகிறீர்கள் என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்க ஒரு சில உணவுகளும் ஒரு காரணியாகும். அந்தவகையில் இந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மது அருந்துதல் அல்லது புகை பிடித்தல்
எந்த வகையான போதையும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) பாதிக்கக்கூடும். இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வேறு சில சிக்கல்களையும் ஏற்படுத்தும். இதனால் நாம் ஆல்கஹால் (Alcohol) மற்றும் சிகரெட் பழக்கத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.


ALSO READ | வெங்காயத்தின் தோலை குப்பையில் வீசாதீர்கள்: இவற்றின் நன்மைகள் சொல்லி மாளாது


உறங்கும் முன் காஃபின் நிறைந்த உணவுகளை உட்கொள்வது தவிர்க்கவும்
உறங்கும் முன் தேநீர் (Tea) அல்லது காபி (Coffee) குடிக்கும் பழக்கம் ஒருசிலருக்கு உண்டு. இதைச் செய்வதன் மூலம், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையக்கூடும். உறங்கும் முன் காஃபின் உட்கொள்வது தூக்கத்தை தொந்தரவு செய்யலாம் மற்றும் மோசமான தூக்கம் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும்.


பதப்படுத்தப்பட்ட உணவுகள்
நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் சில விஷயங்களில் ஒன்றானது பதப்படுத்தப்பட்ட உணவு. பதப்படுத்தப்பட்ட ஒவ்வொரு உணவிலும் நிறைய சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் உள்ளன, அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடும். இதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை நிறுத்துங்கள். இதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க முடியும்.


சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்
சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கலாம். 


பாஸ்ட் புட்
பெரும்பாலான மக்கள் பாஸ்ட் புட்டை (Fast Food) எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள், ஆனால் இந்த உணவுகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். பாஸ்ட் புட் இல் அதிக அளவு கலோரிகள், கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளது. இந்த உணவுகளில் வைட்டமின்கள் (Vitamins) மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு பாஸ்ட் புட்டும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.


ALSO READ | Health news: முட்டை உங்கள் நண்பனா எதிரியா? அது உங்கள் கையில் உள்ளது!!


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR