சோயா பால் சிறந்த ஆற்றல் பெற உதவுகிறது. புரதசத்து, நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்புசத்து போன்றவை அதிகமாக இருக்கிறது. தாது பொருட்களில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம்,பாஸ்போரோஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்றவை உள்ளன. உலர்ந்த சோயாபீன்ஸில் 36–56% புரத அளவு உள்ளது. சோயாவில் புரதச்சத்து அதிகம் இருப்பதுடன், குறைந்த நிறைவுற்ற கொழுப்பு உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோயாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதங்கள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. மக்கள் மத்தியில் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கும், ஆரோக்கியமான உணவை ஊக்குவிப்பதற்கும் சோயா பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. சோயா பால் சீனா மற்றும் இந்தியாவில் விற்கப்படுகின்றன. பால் பொருட்கள் மற்றும் இறைச்சியை சாப்பிடாதவர்களுக்கு சோயா பால் (Soya Milk) ஒரு ஊட்டச்சத்தான மாற்று.


ALSO READ | பால் குடிப்பதால் நன்மைகள் மட்டுமல்ல, சிலருக்கு பாதிப்புகளும் உண்டு


* சோயா பால் சிறந்த ஆற்றல் பெற உதவுகிறது. புரதசத்து, நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்புசத்து போன்றவை அதிகமாக இருக்கிறது. தாது பொருட்களில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம்,பாஸ்போரோஸ் , பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்றவை உள்ளன. 


* வைட்டமின்களில் போலேட், தியாமின், ரிபோபிளவின், நியாசின், வைட்டமின் பி12, வைட்டமின் டி, வைட்டமின் கே , வைட்டமின் ஈ போன்றவை சோயா பாலில் காணப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துகள் நிறைந்த சோயா பால் உடல் நலத்தை அதிகரிக்கிறது.


* சோயா பாலில் உள்ள புரத சத்து மனித உடலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். புரத சத்தில் உள்ள அமினோ அமிலங்கள் உடல் நலக் கோளாறு ஏற்படும் போது அதனை சீரமைக்க பல நன்மைகளை செய்கின்றது. டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது. 


* சோயா பாலை அதிகம் உட்கொள்வதன் மூலம் ஆண்மை சுரப்பி புற்று நோய் தடுக்கப்படுகிறது. சோயா பாலை அதிகம் உட்கொள்ளும் ஆண்களுக்கு இந்த நோயின் பாதிப்புகள் தடுக்க படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. 


* சோயா உணவை எடுத்துக் கொள்வதால் வளர்சிதை மாற்றத்தால் ஆண்களுக்கும், மெனோபாஸ் காலத்திற்கு பிறகு பெண்களுக்கு இயல்பாகவே உடல் பருமன் ஏற்படுகிறது. சோயாவில் உள்ள ஐசோபிளவோன்ஸ் கொழுப்பிணியாக்கத்தை தடை செய்து, கொழுப்பு திசுக்கள் வளர்ச்சியை குறைக்கிறது. ஆகவே சோயா பால் மற்றும் சோயா உணவுகளை உண்பதால் கொலஸ்ட்ரால் கட்டுப்பட்டு, உடல் பருமன் சீராகி, சீரான இதய ஆரோக்கியத்தை கொடுக்கிறது. 


ALSO READ | Health News: இந்த உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படும், ஜாக்கிரதை!!