Barley: அடேங்கப்பா! பார்லி சூப்பில் இத்தனை மருத்துவ பயன்களா!!
ஊட்டச்சத்து மிகுந்த பார்லி உடல் வலிமைக்குப் பெரிதும் உதவுகிறது. தொடர்ந்து பார்லியை உணவில் சேர்த்து வந்தால் ஆரோக்கியம் என்றும் சீராக இருக்கும்
அரிசி வகைகளில் ஒன்றாக இருக்கும் பார்லி மிகுந்த ஊட்டச்சத்து மிகுந்தது. ஊட்டச்சத்து மிகுந்த பார்லி உடல் வலிமைக்குப் பெரிதும் உதவுகிறது. பார்லி அரிசியில் “டெக்ஸ்ட்ரின்” என்னும் சத்துப் பொருள் உள்ளது. இது தண்ணீரில் கொதிக்கும் போது ஊட்டச்சத்தாக மாறிவிடுகின்றன. பார்லி கஞ்சி குடித்தால் நோயின் காரணமாக ஏற்பட்ட பலவீனம் அகலும், உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழற்சி குணமாகும்.
கெட்ட கொலஸ்ட்ராலைப் (lowering bad cholesterol) போக்கி, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்வதில் பார்லி அரிசி சிறந்து விளங்குகிறது. பார்லியில் உள்ள பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்தும், வைட்டமின் பி சத்தும் உடலுக்கு மிகவும் அவசியமானது.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் பார்லி, இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் ப்ரோபியானிக் என்கிற அமிலம் இருக்கிறது. அது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
Also Read | கோதுமையை விட 6 மடங்கு நார்ச்சத்து கொண்ட குதிரைவாலியின் நன்மைகள்
பார்லியில் பீட்டா க்ளூக்கோன், பித்த நீருடன் சேர்ந்து, கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும். உடலிலுள்ள நச்சு நீரை வெளியேற்றும் தன்மை இருக்கும் பார்லியை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றான பார்லியை டயட் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்பிணிப் பெண்கள் என அனைவரும் சாப்பிடலாம்.
பார்லி உட்கொள்வதால், உடற்சக்தி அதிகரிக்கிறது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சிருநீரத்தின் செயலாற்றலை ஊக்குவித்து செரிமான கோளாறுகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
பார்லியில் இருக்கும் வைட்டமின் சி சத்து உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலுவூட்டுகிறது. அதோடு இதிலிருக்கும் இரும்புச்சத்து ரத்தத்தின் அடர்த்தியை சீராக்குகிறது. இதனால் இரத்த சோகை, மயக்கம் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் பார்லி சிறுநீரகத்தின் செயலாற்றல் மேம்படவும் பயனளிக்கிறது.
Also Read | Allergy: ஆணுறையும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் அதற்கான காரணம் தெரியுமா?
பார்லியில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்றவை எலும்புகளை வலுப்படுத்துகின்றன. பார்லியில் உள்ள பாஸ்பரஸ் சத்து, எலும்பு மற்றும் பல் சார்ந்த கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.
பார்லியை கஞ்சியாக மட்டுமல்ல, சூப்பாகவும் செய்து குடிக்கலாம். சூப் செய்வது மிகவும் சுலபமானது.முயற்சித்துப் பாருங்கள்...
பார்லி – 1 டேபிள்ஸ்பூன், பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் – கால் கிலோ
பூண்டு – 5 பல்
மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப
கொழுப்பு நீக்கிய பால்
செய்முறை: பார்லியை 3 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரை வேக்காடு வெந்ததும், நீளநீளமாக நறுக்கிய காய்கறிகள், பூண்டு சேர்க்கவும். காய்கறிகள் அதிகம் குழைவாக வேகக்கூடாது. பிறகு, அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, பால் விட்டுப் பரிமாறவும்.
Also Read | ஆரோக்கியமான வாழ்வுக்கு அஸ்திவாரம் போடும் தினை மலட்டு தன்மையை நீக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR