சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? ‘இந்த’ யோகாசனங்களை செய்து பாருங்கள்..
Diabetes Control Yoga Asanas: சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய யோகாசனஙகளின் லிஸ்ட்.
Diabetes Control Yoga Asanas : உலக சுகாதார மையம் நடத்திய ஒரு ஆவில், உலகளவில் 422 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயினால் அவதிப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு வாழ்வியல் மாற்றங்கள், உணவு பழக்கங்கள் என பல காரணங்கள் உள்ளன. நமது தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலமாகவும், வாழ்வியல் மாற்றங்கள் மூலமாகவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர், மருத்துவர்கள். அப்படி நாம் தினசரி நடவடிக்கைகளில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது, யோகாசனங்கள்.
யோகா ஆசனங்களினால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மட்டுமன்றி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைத்து உடல் நலனை பேணி பாதுகாத்துக்கொள்ளலாம். யோகாசனம் செய்வதால் உடலுக்கு மட்டுமன்றி, மனதுக்கும் அமைதி கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் யோகாசனங்களை இங்கு பார்ப்போம்.
1.தனுராசனா:
தனுராசனாவை செய்வதால், முதுகு, கழுத்து, காலின் பின்பகுதி ஆகியவை வலுவடையும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு மட்டுமன்றி, மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் வலி நீங்கவும் இந்த ஆசனத்தை செய்யலாம்.
எப்படி செய்ய வேண்டும்?
>தரையில் குப்புற படுக்க வேண்டும்
>கைகளை நன்றாக உயர்த்தில் கால்களை நன்றாக பின்பக்கமாக தூக்க வேண்டும். பின்னர் கைகளால் கால்களை பிடிக்க வேண்டும்.
>சிறிது நேரம் மூச்சை இழுத்து விட்டு, உங்கள் மார்பக பகுதியை தரையில் இருந்து தூக்க வேண்டும்.
>மூச்சை இழுத்து விடும் போது நேராக பார்க்கவும்.
>இப்படியே 15 முதல் 30 வினாடிகளுக்கு இருக்க வேண்டும்
சர்க்கரை நோயாளிகளுக்கு என்ன பயன்?
இந்த ஆசனம் வாய்வு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது கல்லீரல், குடல் மற்றும் கணையத்தில் மாயாஜால விளைவுகளை ஏற்படுத்துகிறது, இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை ஏற்படும்.
2.அர்த்த மத்சேந்திரசனா:
அர்த்த மத்சேந்திரசனாவை கை, இடுப்பு மற்றும் கால்களை உபயோகித்து செய்ய வேண்டும். இதை மாதவிடாய் காலத்திலும், கர்ப்ப காலத்திலும் செய்வதை தவிர்க்கவும்.
எப்படி செய்ய வேண்டும்?
>மண்டியிட்டு, உங்கள் முதுகை நேராக வைத்து உங்கள் குதிகால் மீது அமரவும்
>மூச்சை உள்ளிழுக்கும்போது உங்கள் கால்களை வலது பக்கமாக நகர்த்தவும்.
>கைகளை தரையில் வைத்துக்கொள்ளலாம்
>உங்கள் இடது காலை உங்கள் வலது காலின் மேல் வைக்கவும்.
>உங்கள் வலது குதிகால் உங்கள் பின்பகுதிக்கு நெருக்கமாகவும், இடது பாதத்தை உங்கள் வலது தொடையில் நெருக்கமாகவும் கொண்டு வரவும்.
>உங்கள் கைகளை நீட்டி, மேல் உடலை இடது பக்கம் திருப்பவும். ஆதரவிற்காக உங்கள் கைகளை தரையில் வைத்துக்கொள்ளலாம்.
>மெதுவாக, மூச்சை இழுத்து விட்டு கைகளை நீட்டிய பின் உங்கள் மேல் உடலைத் திருப்பவும்.
>உங்கள் இடது கால் உள்ளே இருக்கும் நிலைக்கு
கொண்டு வர உங்கள் இடது காலை நகர்த்தவும்.
>இப்படியே இடது காலுக்கு செய்ய வேண்டும்
சர்க்கரை நோயாளிகளுக்கு என்ன பயன்?
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உணவை ஜீரணிப்பது கடினமாக இருக்கும். அர்த்தமத்ஸ்யாசனம் குடலைச் சுத்தப்படுத்துகிறது மற்றும் கணையச் சாறுகளின் சுரப்பைத் தூண்டுகிறது. இது செரிமானம் உட்பட உடலில் பல்வேறு உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது, மேலும் கல்லீரலில் நச்சு நீக்கும் செயல்முறைக்கும் இந்த ஆசனம் உதவுகிறது.
3.புஜங்காசனம்:
புஜங்காசனத்தை ஆங்கிலத்தில் கோப்ரா போஸ் என குறிப்பிடுவர்.
இதை எப்படி செய்ய வேண்டும்?
>உங்கள் வயிற்றில் படுத்துக் கொள்ளுங்கள்.
>உங்கள் கால்களை ஒன்றாகக் கொண்டு வர வேண்டும்
>உங்கள் கைகளை உங்கள் முழங்கைகளில் வளைத்து தோள்பட்டைக்கு அருகில் வைக்க வேண்டும்
>உங்கள் மார்பை தரையில் இருந்து உயர்த்தும்போது மெதுவாக மூச்சு விடவும்
>நேராக நிமிர்ந்து பார்த்து உடலில் உள்ள தசைகளை தளர்த்தவும்
>மெதுவாக மூச்சை இழுத்து விடவும்
>சிறிது நேரம் கழித்து தரையில் மெதுவாக படுக்கவும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு என்ன பயன்?
முதுகுத்தண்டில்தான் நமது செயல்பாட்டிற்கான அனைத்து நரம்புகளும் இணைந்து இருக்கின்றன. இந்த ஆசனம் முதுகுத்தண்டை வலுப்படுத்தி, பின்பகுதியில் இருக்கும் தசைகளை சாந்தப்படுத்துகிறது. இந்த ஆசனம் செய்வதால் குடல் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு உடலில் உள்ள நச்சுகள் மலம் மூலமாக வெளியேறுவதற்கு வழிவகை செய்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ