Yoga To Prevent Hair Fall: யோகா செய்வது உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் நல்ல விளைவை ஏற்படுத்தும். ஆனால் யோகா செய்வதன் மூலம் நம்மை நாம் அழகாக வைத்திருக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம் யோகா நமது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி நமது சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளை குறைப்பதற்கும் பயன் தரும். பலர் தங்கள் முடி வளர்ச்சி மற்றும் முடி உதிர்தல் பற்றி கவலைப்படுகிறார்கள். இதற்கு பல விலையுயர்ந்த சிகிச்சையை எடுத்துக் கொள்கின்றனர். எனினும் விரும்பிய பலனை அடைவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் முடி உதிர்வதால் சிரமம் படுகிறீர்கள் என்றால், இதை அடியோட தடுக்க தொடர்ந்து யோகா செய்யத் தொடங்குங்கள். எனவே முடி உதிர்வைத் தடுக்க உதவும் யோகாசனங்கள் எவை என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முடி உதிர்வதை அடியோட தடுக்க யோகா | (yoga Asanas To Stop Hair Fall):


1. Kapalabhati (கபாலபதி)
கபாலம் என்றால் மண்டையோடு, பதி என்றால் ஒளிவீசுதல் என்று பொருள். இப்பயிற்சி மண்டை யோட்டை சுத்திகரிக்கிறது. ஆதனால் இந்த ஆசனத்தை சுத்திகரிப்பு பயிற்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த செயல்முறை காரணமாக, மூளையின் உள்ளேயும், மூளையின் கீழ் உள்ள உறுப்புகளும் மூளை, சிறு மூளை மற்றும் மூக்கு முனையுடன் இணைந்திருக்கும் தலையில் உள்ள அனைத்து இடைவெளிகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கபாலபதி யோகா செய்வதன் மூலம், உங்கள் தலையில் ஆக்ஸிஜனின் ஓட்டம் மேம்படத் தொடங்குகிறது. இதனால் முடி நன்றாக வளர ஆரம்பிக்கும். கபாலபதி செய்ய, நீங்கள் தியான நிலையில் அமர்ந்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு, மெதுவாக ஒரு ஆழமான மூச்சை எடுத்து, உங்கள் வயிற்று தசைகளை சுருங்கும்போது மூச்சை வெளியே விடவும். இதை 1-2 நிமிடங்கள் செய்து வரவும்.


மேலும் படிக்க | கண்களை பாதிக்கும் புற ஊதாக்கதிர்களில் இருந்து தப்பிக்க 8 வழிகள்..!


2. Sarvangasana (சர்வாங்காசனம்)
சர்வாங்காசனம் உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்த ஆசனமானது தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தோள்பட்டை ஆதரவுடன் தலைகீழாக நிற்கும் நிலையை இந்த ஆசனம் குறிப்பிடுகிறது. சர்வம், அங்கம், ஆசனம் ஆகிய 3 வடமொழிச் சொற்களின் கூட்டுச் சொல்தான் சர்வாங்காசனம் எனப்படுகிறது. சர்வம் என்றால் அனைத்து என்றும் அங்கம் என்றால் உறுப்பு என்றும் ஆசனம் என்றால் நிலை என்றும் பொருள் வழங்கப்படுவதால் உடல் முழுதும் பயிற்சியில் ஈடுபடும் முறைதான் சர்வாங்கசனம் ஆகும். சர்வாங்காசனம் உங்கள் முடி வளர்ச்சிக்கு சிறந்த யோகாவாக கருதப்படுகிறது. இதனுடன், இந்த யோகா செய்வதன் மூலம், உங்கள் உடல் நிலையும் மேம்படத் தொடங்குகிறது.


3. Uttanasana (உத்தனாசனம்)
உத்தனாசனம் உங்கள் தலைக்கு இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிக்கிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம், மயிர்க்கால்கள் வலுவடைந்து, முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதன் காரணமாக, உங்கள் தலைமுடி அடர்த்தியாகும். இந்த ஆசனத்தை செய்ய, முதலில் உங்கள் கால்களை ஒன்றாக சேர்த்து நிற்கவும். இதற்குப் பிறகு, உங்கள் கைகளை நன்றாக உயர்த்தவும். பின்னர் மூச்சை உள்ளிழுக்கும் போது கீழே வந்து தரையைத் தொட முயற்சிக்கவும். இதற்குப் பிறகு, உங்கள் முழங்கால்களை கழுத்தை நோக்கி கொண்டு அவற்றைத் தொட முயற்சிக்கவும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தினமும் ஓடினால் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுக்குள் வருமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ