Yoga For Gastric Problems: வாயு தொல்லை பாடாய் படுத்துகிறதா? இந்த ஆசனத்தை செய்யுங்க

Yoga Asanas For Gastric Problems in Tamil: வாயு பிரச்சினையால் நீங்கள் தினமும் அவதிப்படுகிறீர்கள் என்றால் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள யோகாசங்களை செய்யுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 1, 2024, 01:05 PM IST
  • இந்த ஆசனத்தை 4 முதல் 5 வினாடிகள் மட்டும் செய்தால் போதும்.
  • வாயு தொல்லை இருந்தால் ஹலாசனம் செய்யலாம்.
  • பவன முக்தாசனம் செய்தால் வாயு பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
Yoga For Gastric Problems: வாயு தொல்லை பாடாய் படுத்துகிறதா? இந்த ஆசனத்தை செய்யுங்க title=

Which Yoga Is Good For Gastric Problem : இன்றைய காலக்கட்டத்தில் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், தவறான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் அசிடிட்டி பிரச்சனைக்கு பலியாகி வருகின்றனர். பொதுவாக, எண்ணெய் அல்லது காரமான உணவுகளை அதிகம் சாப்பிடும் போது இந்த பிரச்சனை ஏற்படும். இது தவிர, சரியாக உணவை மென்று சாப்பிடாமல் இருப்பது, அதிகமாக டீ, காபி குடிப்பது அல்லது புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காரணங்களாலும் இந்தப் பிரச்சனை ஏற்படக் கூடும். மேலும் இதனால் வாயு பிரச்சினை ஏற்படத் தொடங்கி விடுகிறது. அதேபோல் வாயு பிரச்சினையால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும். எடுத்துக்காட்டாக, வாந்தி, தலைவலி போன்ற தொல்லைகள் ஏற்படுத்தும். இந்நிலையில் நீங்களும் இந்த வாயு பிரச்சினையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில யோகாசனங்களை செய்யலாம். இந்த ஆசனங்கள் செய்வதன் மூலம் வாயு தொல்லையில் இருந்து விடுப்படலாம். எனவே இப்போது அந்த யோகாசனங்கள் எவை என்று பார்ப்போம்.

வாயு தொல்லை நீங்க இந்த யோகாசனங்களை செய்யவும் | Yoga For Gas Problem In Tamil

பவன முக்தாசனம் - Pavana Muktasana :
பவன முக்தாசனம் தொடர்ந்து செய்வதன் மூலம் வாயு பிரச்சினையில் (Gastric Problems) இருந்து விடுபடலாம். இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் கால்களை நீகட்டி நேராக உட்காரவும். முதுகுத்தண்டை நேராக வைத்தபடி கைகளை மேலே உயர்த்தவும். பின் மூச்சை வெளியிடும்போது இடுப்பை முன்னோக்கி வளைத்து, மேல் உடலை கீழ் உடலின் மீது வைக்கவும். உங்கள் கைகளால் கால்விரல்களை பிடிக்கவும் மற்றும் மூக்கால் முழங்கால்களைத் தொட முயற்சிக்கவும். ஆரம்பத்தில் இந்த யோகம் செய்வது கடினமாக இருக்கலாம் ஆனால் படிப்படியாக நீங்கள் நல்ல நிலைக்கு வருவீர்கள். இந்த ஆசனத்தை 4 முதல் 5 வினாடிகள் மட்டும் செய்தால் போதும்.

மேலும் படிக்க | Thigh Fat: தொடை கொழுப்பை வேகமா குறைக்கணுமா? டென்ஷன் வேண்டாம்... இந்த யோகாசனங்கள் உதவும்

ஹலாசனம் - Halasanam :
வாயு தொல்லை இருந்தால் ஹலாசனம் செய்யலாம். இந்த ஆசனத்தை செய்ய முதலில் தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். பின் மூச்சை உள்ளிழுத்த படி, இரண்டு கால்களையும் ஒன்றாக மேலே உயர்த்த வேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் வைத்திருக்க வேண்டும். பின் கால்களை மெதுவாக தலைக்கு மேல் உயர்த்து, முதுகை வளைத்து பாதங்களை தலைக்கு பின்புறத்தில் உள்ள தரையைத் தொட முயற்சிக்க வேண்டும். இந்நிலையில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக வெளியிட வேண்டும். பின்பு மெதுவாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த ஆசனத்தை 3-5 முறை செய்யலாம். இந்த ஆசனம் செய்வதன் மூலம், வயிற்றுப் பிரச்சனை நீங்குவது மட்டுமின்றி, முதுகுவலியிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | skin care routine: முகம் பளபளவென இருக்க தூங்குவதற்கு முன்னால் இதை பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News