உடலை ஆரோக்கியமாகவும், பிட் ஆகவும் வைத்திருப்பதில் நமது உணவு 70 சதவீதம் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமல்லாத உணவு தேர்வுகள்  ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாம் உண்ணும் உணவில் சரியான அளவு புரதம், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் ஆகியவை இருக்க வேண்டும். அதற்கு. உங்கள் அன்றாட உணவில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் பால்  என அனைத்தையும் சேர்க்க வேண்டும்.


ஆரோக்கியமற்ற உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்றாலும், குறைந்தபட்சம், அதனை முடிந்த வரையில் தவிர்த்து மாற்று ஊஅணவை உண்ணலாம். மேலும், வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் பொருத்த உணவுகள் சாப்பிடுவதால் ஒன்றும் ஆகி விடாது. அடிக்கடி சாப்பிடுவது தவறு.


ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!


ஆரோக்கியமான உணவுப் பழக்கம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற நோய்களின் அபாயத்தையும் குறைக்கும். நீங்கள் வகுக்கும் டயட் ப்ளான்கள் உங்கள் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.


பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளில் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் உகந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இருப்பினும், ஆரோக்கியமான உடலை பெற அவற்றை சரியான விகிதத்தில் உட்கொள்வதும் முக்கியம். 


ALSO READ | அழகான கேசத்திற்கான Keratine சிகிச்சை; அதிக செலவில்லை, பழைய சாதம் போதும்


துரித உணவு நிறைந்த இந்த உலகில் ஆரோக்கியமாக சாப்பிடுவது மற்றும் எடையை பராமரிப்பது ஒரு சவாலான விஷயம் தான். எடை இழப்புக்கு முயற்சி செய்யும் போது, உணவில் காய்கறிகளின் அளவை அதிகரித்து. அரிசி கோதுமையை குறைத்தாலே நல்ல பலன் இருக்கும்.  


அதோடு, நீங்கள் சரியான சமையல் முறையைப் பயன்படுத்துவது, ஆரோக்கியமான பொருட்களை கொண்ட உங்கள் உணவைத் தயாரிப்பது ம் முக்கியம் ஆரோக்கியமான சமையல் என்பது வெவ்வேறு வகை உணவுகளை உள்ளடக்கியது. முழு தானியங்கள், பால், உலர் பழங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பழங்கள் மற்றும் காய்கறி ஆகியவை அனைத்தும் உங்கள் உணவில் இருக்க வேண்டும் 


 கலோரி எண்ணிக்கை அதிகம் உள்ள உணவுகளான, ஐஸ்கிரீம்கள், பொரித்த உணவுகள் மற்றும் இனிப்புகள், சிக்கின் ஆகியவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும் எபோதாவது சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், தினமும் சாப்பிடுவது நிச்சயம் கேடு விளைவிக்கும். 


ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR