மகாராஷ்டிராவின் (Maharashtra) தானே மாவட்டத்தைச் சேர்ந்த 106 வயது பெண் ஒருவர் COVID-19 ஐ தோற்கடித்து, ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குத் திரும்பினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது முகத்தில் மகிழ்ச்சி பொங்க, தனது discharge certificate-ஐ ஊடகங்களுக்கு பெருமையுடன் காட்டிக்கொண்டே, அவர் 10 நாட்களாக தான் தங்கியிருந்த மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.


டோம்பிவ்லியில் (Dombivili) வசிக்கும், நூறு வயதைத் தாண்டிய அந்த மூதாட்டிக்கு முதலில் இந்த தொற்று வந்தபோது, அவரது வயது காரணமாக, எந்தவொரு மருத்துவமனையும் அவரை சேர்த்துக்கொள்ள தயாராக இல்லை என்று அவரது மருமகள் கூறினார். இப்போது தனது மாமியார் நோயைத் தோற்கடித்து வீடு திரும்புவது அவருக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது.


ALSO READ: Good News: Iodine Solution 15 வினாடிகளில் Corona Virus-ஐ செயலிழக்கச் செய்யும்: ஆய்வு!!


சவ்லாரம் கிருதா சங்குலில் (விளையாட்டு வளாகத்தில்) கல்யாண் டோம்பிவ்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (KDMC) அமைத்த கோவிட் -19 சிகிச்சை மையத்தில் 10 நாட்களுக்கு முன்பு அவர் அனுமதிக்கப்பட்டார். மேலும் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் அவரை சரியான முறையில் கவனித்துக்கொண்டன என்று அவரது மருமகள் கூறினார்.


"மருத்துவமனையின் மருத்துவ குழுவுக்கு நாங்கள் மிகவும் நன்றி செலுத்துகிறோம். அவர்களது சரியான பராமரிப்பு கொரோனா வைரஸை தோற்கடிக்க உதவியது," என்று அவர் கூறினார்.


இந்த COVID-19  சிகிச்சை மையத்தை நிர்வகிக்கும் ”ஒரு ரூபாய் கிளினிக்கின்” நிர்வாக இயக்குனர் டாக்டர் ராகுல் குலே, அந்த மூதாட்டியை சரியாக கவனித்துக்கொண்டதற்காக தனது குழுவை பாராட்டினார்.


"அவர் சிகிச்சையில் குணமடைந்தது எங்களுக்கு மகிழ்ச்சி" என்று கூறிய அவர், ஜூலை 27 அன்று மருத்துவமனை திறக்கப்பட்டது என்றும் இதுவரை 1,100 COVID-19 நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


ஒரு நோயாளிக்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கும்”ஒரு ரூபாய் கிளினிக்குகள்”, மத்திய ரயில்வேயின் புறநகர் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் விபத்தில் சிக்கிக்கொள்ளும் மக்களுக்கு உடனடி சிகிச்சையை அளிக்கவும் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இவை துவக்கப்பட்டன.


ALSO READ: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 1130 பேர் உயிரிழப்பு..!


வயதான பெண்மணிக்கு முறையான சிகிச்சை அளித்ததற்காக KDMC ஊழியர்களையும், சிவசேனாவின் கல்யாண் எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டேவையும் ஆதித்ய தாக்ரே (Aditya Thackrey) ட்விட்டரில் பாராட்டினார்.


“அந்தப் பெண்ணின் ஆசீர்வாதங்களும் அவரைப் போன்ற பலரது ஆசீர்வாதங்களும் நம் அனைவரையும் மேலும் உழைக்க வைக்கும்” என்றார் அவர்.


KDMC செய்தித் தொடர்பாளர் மாதுரி போபாலே கூறுகையில், இதுவரை 38,301 பேர், குடிமை வரம்புக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 762 பேர் நோய் காரணமாக இறந்துள்ளனர் என்றார்.


தற்போது வரை, கல்யாண்-டோம்பிவ்லியில் 5,451 பேர் சிகிச்சையில் உள்ளனர். 32,088 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR