நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் அதிகப்படியான மின்வெட்டுகளை சந்தித்து வருகின்றன. கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் மத்திய அரசு, நிலக்கரி தட்டுப்பாடுகளை போக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக நாடு முழுவதும் 1,100 பயணிகள் ரயிலை ரத்து செய்ய ரயில்வே முடிவெடுத்துள்ளது. நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் விரைவாக இலக்கை அடையும் வகையில் இந்த முடிவை ரயில்வே எடுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | குடிச்சா இதெல்லாம் சகஜம் தான் - ஆந்திர பெண் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!


அடுத்த 20 நாட்களுக்கு படிப்படியாக இந்த பயணிகள் ரயில்கள் வரிசையாக ரத்து செய்யப்பட இருக்கின்றன. ரயில்வேத்துறையின் இந்த முடிவு ரயில் பயணிகளை கலக்கமடையச் செய்துள்ளது. மின்சார பிரச்சனையை தீர்வு காண்பதற்காக இந்த திட்டத்தை அமல்படுத்த உள்ள ரயில்வே நிர்வாகம்,  பயணிகள் ரயிலை ரத்து செய்வதன் மூலம் கூடுதல் நிலக்கரி கொண்டு செல்ல முடியும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மெயில், எகஸ்பிரஸ் ரயில்களின் பயணங்களும் இதில் ரத்து செய்யப்பட இருக்கின்றன. அனல்மின் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் நிலக்கரி விரைவாக அங்கு செல்லும் வகையில் ஏற்கனவே 670 ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை அடுத்தடுத்த மாதங்களுக்கும் தொடரும் என கூறப்பட்டுள்ளது. ரயில்கள் திடீரென ரத்து செய்யப்படும்  என்ற அறிவிப்பு சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு செல்வோருக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்வோரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 


மேலும் படிக்க | Covovax தடுப்பூசி 12+ அனைவருக்கும் கிடைக்கும்: SII CEO ஆதார் பூனவல்லா


நாட்டில் அதிகரித்து வரும் வெப்பத்தால், மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி தேவை மிக குறைவாகவே இருப்பதால், ரயில்வே மூலம் நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.திரிபாதி கூறுகையில், கடந்த ஆண்டை விட நிலக்கரி தேவை மற்றும் நுகர்வு 20 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR