மத்தியப் பிரதேசம்: கமல்நாத் அரசுக்கு எதிராக ஒரு பெரிய கிளர்ச்சி நடந்துள்ளது. மத்திய பிரதேச (Madhya Pradesh) கமல்நாத் அரசாங்கத்தின் (Kamal Nath-led Congress government) 6 அமைச்சர்கள் உட்பட 17 எம்.எல்.ஏக்கள் பெங்களூரை அடைந்துள்ளனர். ஏற்கனவே பெங்களூரில் இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கி உள்ளனர். இந்த எம்.எல்.ஏக்கள் மூன்று விமானங்கள் மூலம் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு சென்றுள்ளனர். இந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் மதியம் 3:30 மணியளவில் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளனர். பிரமுகன் சிங் தோமர், துளசி சிலாவத், கோவிந்த் ராஜ்புத், பிரபுராம் சவுத்ரி, டிம்பர் தேவி, மகேந்திர சிசோடியா ஆகியோர் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட கமல்நாத் அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஆவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தவிர, டெல்லியில் இருந்து பெங்களூருக்கு கொண்டு சென்ற 17 எம்.எல்.ஏக்களின் பெயர்கள் பின்வருமாறு.. ராஜ்வர்தன் சிங், ஓ.பி.எஸ் படோரியா, கிரிராஜ் தண்டோடியா, பிஜேந்திர யாதவ், ஜஸ்பால் ஜஜ்ஜி, ரன்வீர் ஜாதவ், கமலேஷ் ஜாதவ், ஜஸ்வந்த் ஜாதவ், ரக்ஷா சிரோனியா, முன்னா லால் கோயல், சுரேஷ் தக்காத், ரகுராஜ் கசனா, ஹர்தேப் சிசனா.


இந்த எம்.எல்.ஏ.க்களில், ஹர்தீப் சிங் டங் தனது ராஜினாமாவை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார். மற்றொரு எம்.எல்.ஏ பிசாஹு லால் சிங் நேற்று பெங்களூரிலிருந்து போபாலுக்கு திரும்பியிருந்தார். 


முதல் முறையாக, மதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது: மத்தியப் பிரதேசத்தில் முதலவர் கமல்நாத்


பிசாஹு லால் சிங் எங்களுக்கு தான் ஆதரவு தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் பாஜகவுடன் நிற்போம் என்ற உறுதிமொழியை கொடுத்த பின்னர் தான், அவர் போபாலுக்குப் புறப்பட்டு சென்றார் என பாஜக (BJP) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மார்ச் 16 ஆம் தேதி தொடங்கயுள்ள மத்தியப் பிரதேச சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, கமல்நாத் அரசுக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் என்றும், இந்த எம்எல்ஏக்களின் உதவியுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் கமல்நாத் அரசு கவிழும் என்றும் நம்பப்படுகிறது.


பாஜகவின் ஆபரேஷன் கமல் அடுத்த சில நாட்களில் நிறைவடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.