மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான போட்டியில் காங்கிரஸை விட பாஜக முன்னிலையில் இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 10-ஆம் தேதி காங்கிரஸிலிருந்து விலகி, பாஜகவில் சேர்ந்தார் சிந்தியா. இந்நிலையில் தற்போது பாஜக-வில் இணைந்துள்ள முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் மீதான மோசடி வழக்கு கைவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு சில நாட்களுக்குப் பிறகு, மத்தியப் பிரதேச முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் திங்கள்கிழமை பதவியேற்றார்.
மத்திய பிரதேச அரசியல் நெருக்கடி தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் புதன்கிழமை அதிகாலை பெங்களூரை அடைந்து கிளர்ச்சி காங்கிரஸ் MLA-க்கள் தங்கியுள்ள ரமாடா ஹோட்டலுக்கு செல்ல முயன்றார்.
மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கபட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அறிவிப்பு!!
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி நாளை சட்டப்பேரவை கூடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என, அம்மாநில ஆளுநர் லால்ஜி டான்டன் அறிவித்துள்ளார்!
ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாக சட்டசபையில் இருந்து ராஜினாமா செய்த மத்திய பிரதேசத்தில் உள்ள 6 கிளர்ச்சி அமைச்சர்கள், தாங்கள் தங்கள் விருப்பப்படி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தூண்டுதலின் பேரில் எல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமாவை சமர்ப்பித்த சில நிமிடங்களில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரை கட்சியில் இருந்து வெளியேற்றினார்.
மத்திய பிரதேச அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் காங்கிரஸ் MLA ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார். மேலும் தனது முடிவு குறித்து ‘முன்னேற வேண்டிய நேரம்’ இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடருமா? ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு பதவி கிடைக்குமா? அல்லது பாஜக ஆட்சி அமைக்குமா? அரசியல் விளையாட்டின் முடிவு என்னவாக இருக்கும் என்று பார்ப்போம்.
17 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சிக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளுமா? அதேநேரத்தில் பாஜக மாநிலத்தில் ஆட்சி அமைக்க தனது காய்களை நகர்த்தி வருகிறது.
முதல் முறையாக, மதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது எனக் கூறி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை மத்திய பிரதேச அரசு நிறைவேற்றியது.
சத்தான உணவை வழங்கும் முயற்சியில், 2020 ஏப்ரல் முதல் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகளை விநியோகிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.