சர்வதேச விமானங்கள் சமீபத்திய புதுப்பிப்புகள்: கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியாவில் மார்ச் 23 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், வந்தே பாரத் (Vande Bharat) பணித்திட்டம் மற்றும் உக்ரைன், பங்களாதேஷ் உட்பட சுமார் 18 நாடுகளுடன் இந்தியா உருவாக்கிய இருதரப்பு விமான குமிழி ஒப்பந்தங்களின் கீழ் சிறப்பு சர்வதேச விமானங்கள் (International Flights) அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியர்களுக்கு பயணம் செய்ய அனுமதி இல்லாத சில நாடுகளும் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது வரை, 2020 மே 6 முதல் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை திருப்பி அழைத்து வர சர்வதேச பயணங்களுக்கு மத்திய அரசு தேவையான வசதிகளை செய்துள்ளது என்று ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.


இந்தியர்கள் செல்லக்கூடிய நாடுகள் எவை?


சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக சில நாடுகளுடன் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Civil Aviation) ஒரு தனி இருதரப்பு குமிழி ஏற்பாட்டை ஏற்படுத்தியுள்ளதால், தற்போது இந்தியர்கள் 18 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.


COVID-19 தொற்றுநோயின் விளைவாக வழக்கமான சர்வதேச விமானங்கள் இடைநிறுத்தப்படும்போது வணிக பயணிகள் சேவைகளை மறுதொடக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான தற்காலிக ஏற்பாடுகள் தான் ஏர் டிராவல் ஒப்பந்தங்கள். அவை பரஸ்பர அனுகூலங்களை உடையவை, அதாவது இரு நாடுகளிலிருந்தும் விமான நிறுவனங்கள் இதே போன்ற நன்மைகளை அனுபவிக்க முடியும்.


அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மாலத்தீவுகள், கனடா, ஜப்பான், பஹ்ரைன், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, கத்தார், ஈராக், ஓமான், பூட்டான், கென்யா, பங்களாதேஷ் மற்றும் உக்ரைன் ஆகியவை இந்தியர்கள் பறக்கக்கூடிய 18 நாடுகளாகும்.


அக்டோபர் 28 முதல் பங்களாதேஷ் இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்கும். மூன்று பங்களாதேஷ் விமான நிறுவனங்கள் - பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ், யுஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் மற்றும் நோவோ ஏர் - ஆரம்பத்தில் வாரத்திற்கு 28 விமானங்களை இயக்கும். ஐந்து இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா மற்றும் கோ ஏர் - இரு நாடுகளுக்கும் இடையில் வாரத்திற்கு 28 விமானங்களை இயக்கும்.


பயணிகள் பயணிப்பதற்கு முன் COVID-19 சோதனைக்கு உட்பட வேண்டும்.


ALSO READ: Covid 19 தடுப்பூசி தொடர்பாக வெளியான முக்கிய தகவல்.......


இந்தியர்கள் செல்ல இது வரை அனுமதி வழங்கப்படாத நாடுகள்:


ஹாங்காங்: ஏர் இந்தியா (Air India) மற்றும் விஸ்தாரா விமானங்களை அக்டோபர் 17 முதல் இந்த மாத இறுதி வரை ஹாங்காங் (Hong kong) தடை செய்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், மூன்றாவது முறையாக ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங் தடைசெய்துள்ளது.


ஜெர்மனி: அண்மையில், இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் லுஃப்தான்சா மற்றும் ஏர் இந்தியா இயக்கும் விமானங்களின் எண்ணிக்கை தொடர்பாக பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்து குமிழி ஏற்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும், ஏர் பப்பில் ஒப்பந்தத்தின் கீழ், தேசிய விமான நிறுவனமான Air India, அக்டோபர் 26 முதல் மார்ச் 28 வரை இந்தியா-ஜெர்மனிக்கு இடையே விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. பயணிகள் தங்கள் டிக்கெட்டை விமானத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், அழைப்பு மையங்கள் அல்லது முன்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யலாம்.


துபாய்: கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று இருந்த பயணிகளை இரண்டு முறை ஏற்றிச் சென்றதால் துபாய் (Dubai) அதிகாரிகள் கடந்த மாதம் அனைத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களையும் 15 நாட்களுக்கு தடை செய்திருந்தனர். ஆனால் இப்போது துபாய் இந்தியாவில் இருந்து விமானங்களை மீண்டும் அனுமதித்துள்ளது.


இருப்பினும், துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் (DCAA) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸிடம் குறிப்பிட்ட நான்கு இந்திய ஆய்வகங்களில் இருந்து பயணிகள் பரிசோதனை செய்து அளிக்கும் COVID-19 அறிக்கைகளை ஏற்க வேண்டாம் என கூறியுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள சூர்யம் ஆய்வகம், கேரள நகரங்களில் உள்ள மைக்ரோஹெல்த் ஆய்வகம்; டெல்லியில் பி பாசின் பாத்லாப்ஸ் மற்றும் நோபல் டயக்னோஸ்டிக் மையம் ஆகியவை அந்த நான்கு ஆய்வகங்களாகும்.


ALSO READ: இந்தியா தற்போது COVID-19-ன் சமூக பரவல் நிலையில் உள்ளது: சுகாதார அமைச்சர் Harsh Vardhan


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR