பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவரங்களை பார்ப்போம்:-


அடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசில் புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணி இடங்கள் உருவாக்கப்படும். இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 67 ஆயிரமாக உயரும்.


மத்திய உள்துறை அமைச்சகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 76 பேர் சேர்க்கப்படுவர். அதன்பின்னர் உள்துறை அமைச்சக பணியாளர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 778 ஆக அதிகரிக்கும்.


போலீஸ் துறையில் 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் புதிதாக இணைவர். அதன்பின்னர் இந்த துறையில் பணியாளர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 13 ஆயிரத்து 689 ஆகிவிடும்.


வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் 2 ஆயிரத்து 109 பேர் பணி அமர்த்தப்படுவார்கள்.


புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறையில் 2 ஆயிரத்து 27 பேர் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.